அண்ணா பல்கலை அறிவிப்பு தற்காலிக பணியாளர்கள் பீதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2016

அண்ணா பல்கலை அறிவிப்பு தற்காலிக பணியாளர்கள் பீதி

அண்ணா பல்கலையில், ஒரே மாதத்தில், 130 காலியிடங்களை நிரப்ப, 10 அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதனால், தற்காலிக பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழக சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற நிலையில், அரசின் பல துறைகளில், காலியிடங்களை நிரப்பும் பணி அவசர கதியில் நடக்கிறது.


அண்ணா பல்கலையில், 130 காலியிடங்களை நிரப்ப, ஜனவரியில் மட்டும், 10 அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.குறுகிய கால இடைவெளியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆட்களை தேர்வு செய்யும் பணி, தினமும் நடக்கிறது.இதேபோல, உதவி பேராசிரியர்களை தேர்வு செய்யும் பணியும், அவசர கதியில் நடக்கிறது. பல்கலையின் கீழ் உள்ள அரசு கல்லுாரிகளில், இளநிலை உதவியாளர்கள், 45 பேர்; அலுவலக உதவியாளர்கள், 75 பேர் புதிதாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த அறிவிப்பு, ஜன., 13ல் வெளியாகி, ஜன., 29 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.அலுவலக உதவியாளருக்கு, 8ம் வகுப்பு; இளநிலை உதவியாளருக்கு பட்டப்படிப்பு, கல்வி த்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பதவியை பெற, ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்துள்ளனர். பலர், அரசியல்வாதிகள் மற்றும் இடைத்தரகர்கள் மூலம், அண்ணா பல்கலையை அணுகியுள்ளனர்.

இதேபோல், அண்ணா பல்கலையின், 10 துறைகளில், 13 ஆய்வு உதவி அலுவலர் பணிக்கும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆறு ஆண்டுகளுக்கு முன், அண்ணா பல்கலை மற்றும் மண்டல அலுவலகங்கள் மூலம், இன்ஜி., கல்லுாரிகளில் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட, 300 அலுவலக உதவியாளர்கள் இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தற்போது, புதிய ஆட்களை நியமிப்பதால், தங்கள் கதி என்ன ஆகுமோ என, தற்காலிக பணியாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி