அரசின் சூழ்ச்சிக்கு ஜாக்டோ பலி...!!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2016

அரசின் சூழ்ச்சிக்கு ஜாக்டோ பலி...!!!!

வேலைநிறுத்தம் எப்போது? 

சரியான தருணத்தில் போராடாமல் இருப்பதும் காலங்கடந்து போராடுவதும் வெற்றிக்கு வழிவகுக்காது. 

ஜாக்டோவின் இந்த  காலதாமதம் ஆசிரியர்களின் கூட்டுப்போராட்ட உணர்வினை காலகாலத்திற்கும் முடக்குவதாய் 
போராட்ட களத்தை விட்டு வெளியேற்றுவதாய் அமையும்.

இடைநிலை ஆசிரியர் ஊதிய இழப்பு ஜாக்டோவின் செயலற்ற தன்மையின் விளைவாய் வரலாற்றின் தீராப்பழியாய் நிலைத்திருக்கப் போகிறது.

இடைநிலை ஆசிரியர்களின் நம்பிக்கையில் சமாதிகட்டும் பெருமையில் அரசுக்கு இணையான பங்கு ஜாக்டோவிற்கு என எதிர்காலம் நம்மை பழிக்கும்.

போராட்டக்களம் கொதித்திருக்கையில் அரசு ஊழியர்கள் போராட்ட நெருப்பை பற்றி நிற்கையில் ஆசிரியர்கள் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டு வாளாவிருப்பதோ? 

கரங்கோர்த்து களத்தில் இறங்க வேண்டாமா? 

இதை விட  பொருத்தமான தருணம் இனியும் வருமா?

அரசுக்கு நெருக்கடி கொடுக்காமல் கோரிக்கைகள் நிறைவேறுமோ? 

அரசின் தந்திரங்களுக்கு பலியாகி அவலநிலையில் தெருவில் நிற்கப் போகிறோமா? 

அரசு ஊழியர் ஆசிரியர் ஒன்றுபட்டு போராட வேண்டிய தேவையும் சூழலும் வாய்த்திருக்கிறது. வாய்ப்பை நழுவ விட்டு வாழ்நாள் முழுவதும் வருந்தி நிற்கப் போகிறோமா? 

போராட்டம் அழைக்கிறது.....

போராட யார் அழைப்பது..... 

காத்திருக்கிறோம் 
ஒற்றை கேள்வியோடு..

நாம் எப்போது???

---விஜி, கிருஷ்ணகிரி.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி