டி.என்.பி.எஸ்.சி. புதிய உறுப்பினர்களுக்கு எதிராக தி.மு.க. வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2016

டி.என்.பி.எஸ்.சி. புதிய உறுப்பினர்களுக்கு எதிராக தி.மு.க. வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

சென்னை ஐகோர்ட்டில், தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஒரு மனு தாக்கல் செய்தார்.அதில், ‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி.க்கு) 11 புதிய உறுப்பினர்களை நியமித்து கடந்த ஜனவரி 31–ந்தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.


புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 உறுப்பினர்களும், ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள். அரசியல் பின்னணியை கொண்டவர்கள். இவர்கள் இப்பதவியை வகிக்கத் தகுதி கிடையாது. இந்த 11 உறுப்பினர்கள் நியமனத்தின்போது தமிழக அரசு சட்டவிதிமுறைகளை பின்பற்றவில்லை. உள்நோக்கத்துடன் இவர்களை நியமித்துள்ளனர்.கல்வியாளர்கள், ஓய்வுப்பெற்ற அரசு அதிகாரிகள் உள்ளிட்டதகுதி வாய்ந்த நபர்களை நியமிக்கவில்லை. எனவே, இந்த 11 பேரது நியமனமும் செல்லாது என்று அறிவிக்கவேண்டும். இவர்களை நியமித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையைரத்து செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பையா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி வாதிட்டார்.

 இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழ்நாடு பணியாளர் மற்றும் நிர்வாகத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு நோட்டீசு அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை வருகிற மார்ச் 4–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி