கல்வி உதவித் தொகை: மின்னஞ்சலில் புகார் அனுப்பலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2016

கல்வி உதவித் தொகை: மின்னஞ்சலில் புகார் அனுப்பலாம்

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெறும்போது ஏற்படும்பிரச்னைகள் குறித்து புகார்களை மின்னஞ்சலில் தெரிவிக்கும் வசதியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.பொருளாதாரத்தில் நலிந்த பிரினர் உயர் கல்வி பெற கல்விஉதவித்தொகையை மத்திய அரசு வழங்கிவருகிறது.


இவற்றைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள், குறைபாடுகள் குறித்த புகார்களை  scholarships.gov.in  என்ற இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை உள்ளது.இந்த நிலையில், மத்தியப் பிரிவு கல்வித் தொகைகள் குறித்த புகார்களை schol-mhrd@gov.in என்ற மின்னஞ்சலுக்கும், ஏஐசிடிஇயின் கல்வி உதவித் தொகை தொடர்பான புகார்களை pgscholarship@aicte-india.org என்ற மின்னஞ்சலுக்கும், யுஜிசி கல்வி உதவித் தொகை தொடர்பான புகார்களை ugcfellowship@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என மத்திய மனிதவளமேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

3 comments:

  1. நண்பர்களுக்கு வணக்கம்,

    தமிழக அரசின் கடந்த 5ஆண்டு வெற்றி பயணம் மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் தலமையில் வெற்றியுடன் நடைபெறுகிறது.,

    அம்மாவின் ஆட்சியில் பலன் அடைந்தவர்கள் ஏராளம் அதில் நமது ஆசிரியர் தகுதித்தேர்வும் ஒன்று அதில் மேலும் நாம் அனைவரும் எதிர்பார்ப்பது
    ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிவிட்டு நமக்கு இன்னும் ஒரு பணி நியமன பட்டியல் வருமா, தாயுள்ளம் கொண்ட அம்மாவின் பொற்கால ஆட்சியில் ஆசிரியராக சேர வாய்ப்பு கிடைக்காதா என எதிர்பார்க்கிறோம்,

    மதிப்பெண் தளர்வு விட்டு விட்டு பணி நியமனம் நடந்தால் பரவாயில்லை என நினைக்கும் ஒரு பிரிவினர்,

    மற்றும்

    என்னை போன்று மதிப்பெண் தளர்வை உறுதி செய்யும் வகையில் பணிநியமனம் சேர்த்து நடந்தால் நன்றாக இருக்கும் என ஒரு பிரிவினர்

    மற்றும்

    வெயிட்டேஜ் இல்லாமல் பணி நியமனம் இருந்தால் பரவாயில்லை என ஒரு பிரிவினர்,

    மற்றும்

    தகுதித்தேர்வு தேர்ச்சி ஆனால் வேலைவாய்ப்பு பணி மூப்பு என ஒரு பிரிவினர்,
    என
    எத்தனை எதிர்பார்ப்பு,

    இதற்கு எல்லாம் விடை தெரிய வேண்டிய வழக்கு நிலவரம் எந்த சூழ்நிலையில் உள்ளது எனவும் தெரியவில்லை,

    வழக்கு பற்றி பேசினால் குற்றம்,
    மதிப்பெண் தளர்வு வேண்டும் என்றால் குற்றம்,
    தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தால் குற்றம்,
    எது எது எதார்தமோ அதை சொன்னால் குற்றம்,

    பரவாயில்லை குற்றம் கண்டு கூறினால் தான் தெளிவு பிறக்கும்,

    பணி நியமனம் நடக்குமோ நடக்காதோ அப்படி நடந்தால் மதிப்பெண் தளர்வுக்கு வாய்ப்பு இருக்கும் என்ற நம்பிக்கையில்,

    கடவுள் நமக்கு நன்மையை தமிழக முதல்வர் அம்மா அவர்களின் வாயிலாக வழங்குவார் என்ற உறுதியுடன் காத்திருப்போம்.,

    ReplyDelete
  2. நன்றி சதீஸ் அவர்களே,

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி