தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 92.1% ஆக உயர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 12, 2017

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 92.1% ஆக உயர்வு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.

இந்த ஆண்டு மொத்த தேர்ச்சிவிகிதம் 92.1%.கடந்த மூன்று ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
கடந்த 2014, 2015 ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி விகிதம் 90.6% ஆக இருந்தது. 2016-ம் ஆண்டு தேர்ச்சி விகிதம் 91.4% ஆகஇருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 92.1% ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இவ்வாண்டு தேர்ச்சி பெற்றோர் 0.7% கூடுதலாகும்.மாணவிகளே அதிகம்வழக்கம்போல் மாணவிகளே மாணவர்களைவிட அதிகளவில் தேர்ச்சிபெற்றுள்ளனர். மாணவிகள் தேர்ச்சி விகிதம்: 94.5%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 89.3%.

முக்கிய புள்ளி விவரம்:

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடைந்தது. தமிழகம், புதுச்சேரியில் 6,737 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்கள் 31,843 பேரும் சிறைக் கைதிகள் 88 பேரும் தேர்வில் கலந்துகொண்டனர். இந்த ஆண்டு முதல்முறையாக, பிளஸ் 2-வுக்கு மே 12-ம் தேதியும் பத்தாம் வகுப்புக்கு மே 19-ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வு தொடங்குவதற்கு முன்பே அறிவிக்கப்பட்டது.அதன்படி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று (வெள்ளிக் கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. அரசு தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி, தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி