'EMIS' இணையதளம் முடங்கியது பள்ளிக்கல்வி துறை பரிதவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 24, 2017

'EMIS' இணையதளம் முடங்கியது பள்ளிக்கல்வி துறை பரிதவிப்பு

மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறையில் சேகரிக்கும், 'எமிஸ்' இணையதளம், ஒரு வாரமாக முடங்கி உள்ளது.தமிழக பள்ளி மாணவர்களின் விபரங்களை, மின்னணு முறைக்கு மாற்ற, 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு திட்டம்அறிவிக்கப்பட்டது.

புதிய முகவரி

சென்னை, அண்ணா பல்கலை தொழில்நுட்ப உதவியுடன், பள்ளிக்கல்வித் துறையே, 'எமிஸ்' இணையதளத்தை பராமரித்தது. தற்போது, அந்த பொறுப்பு, தனியார் நிறுவனத்திற்கு தரப்பட்டுள்ளது.இதையடுத்து, புதிய இணையதள முகவரி தரப்பட்டு, அனைத்து பள்ளிகளும், இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம் என, கல்வித் துறை அறிவித்தது.
ஆனால், புதிய இணைய தளத்தில், தொடர்ந்து தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுகிறது. இரு நாட்களாக, இணையதளம் மொத்தமாக முடங்கி உள்ளது.
இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:'எமிஸ்' திட்டத்தில், மாணவர் பெயர், ரத்தப் பிரிவு, பெற்றோர் விபரம், மொபைல் போன் எண், ஆதார் எண், வங்கி கணக்கு எண், குடும்ப உறுப்பினர் விபரம் என, பல தகவல்களை சேகரிக்க வேண்டும். ஏற்கனவே, ௨௦௧௧ - ௨௦௧௬ வரை, இந்த தகவல்களை இணையதளத்தில் இணைத்துள்ளோம்.


அழுத்தம்

தற்போது, மீண்டும், புதிய இணையதளத்தில் புதிதாக இணைக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. ஆனால், புதிய இணையதளம் மொத்தமாக முடங்கி உள்ளது.
அதிகாரிகளோ, கால அவகாசம் கொடுத்து,தகவல்களை பதிவேற்றம் செய்ய, அழுத்தம் தருகின்றனர். ஆனால், இணைய தள தொழில்நுட்பக் கோளாறு, இன்னும் சரி செய்யப்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

2 comments:

  1. வெயிட்டேஜ் முறையை ஏற்று கொண்ட நண்பர்களின் கவனத்திற்கு!

    நாம் அனைவரும் வெயிட்டேஜ் ஆதரவாளர்கள் கிடையாது. அதே வேளையில் சரியோ தவறோ இம்முறையை ஏற்றுகொண்டவர்கள்.
    இப்போது நாம் ஒரு வரிசையில் நிற்கிறோம். இப்போது வரிசையை மாற்றி அமைத்தால் நிச்சயம் நாம் பாதிக்கபடுவோம்.
    1 வெயிட்டேஜ் முறையை மாற்றிைாலோ நீக்கினாலோ நிச்சயம் நாம் பாதிக்கபடுவோம்
    2வெயிட்டேஜ் மாற்றினால் மீண்டும் வழக்கிற்கு வழிவகுக்கும்
    3 உண்மைக்கு புறம்பாக நிறைய பேர் பட்டியலில் இடம் பெறுவர்
    4 விரைவாக செயல்படவேண்டிய தருணம் மறவாதீர் வெற்றிகனிக்கு மிக அருகில் உள்ளோம்
    5நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் கீழ்கண்ட படிவத்தை நிரப்பி கையொப்பம் இட்டு முடிந்தால் புகைப்படம் இணைத்து தெளிவாக எடுத்து குழுவில் அனுப்பவும்.
    100 க்குறைவானவர்கள் திரும்ப திரும்ப அமைச்சரை அணுகி வெயிட்டேஜ் மாற்ற கோரி நிர்பந்திக்கின்றனர். அமைச்சரும் தற்போது அவர்களது பக்கம் சாய்ந்தது போல் தெரிகிறது.
    இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக வெயிட்டேஜிக்கு 500 பேரின் ஒப்புதல் கடிதத்தை முதல்வர் மற்றும் அமைச்சரிடம் நேரில் சந்தித்து ஒப்படைக்க உள்ளோம்.
    உங்கள் நண்பர்களிடம் விபரத்தை கூறி படிவத்தை அனுப்பவும். நன்றி

    குறிப்பு: பாதிக்கபட்டவர்களை அழைத்து பேசம்படும் என்று அமைச்சர் கூறி உள்ளார்.
    ஒப்புதல் கடிதம் அளிப்பவர்கள் பாதித்தவர்களாக கருதபடுவர் என்பதை மறந்துவிடாதீர்.

    விபரீதத்தை உணர்வீர். விரைந்து செயல்படுவீர்!

    மாதிரி படிவம்:

    ஆசிரியர் தகுதிதேர்வில் நடைமுறையில் உள்ள (அரசாணை 71 ) வெயிட்டேஜ் முறையை பின்பற்ற வேண்டுகிறோம்.

    பெயர் : க.பாரதி கண்ணன்
    பதிவு எண்: 13TE20209111
    அலைபேசி : 950095482
    முகவரி : 11/2 அன்னை இல்லம்
    லெட்சுமிபுரம்,
    காந்திதெரு, 
    திருமயம் வடக்கு,
    புதுக்கோட்டை -612043

    மதிப்பிற்குறிய ஐயா வணக்கம்.
    ஆசிரியர் நியமனத்தில் புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் முறையை தொடர்ந்து நடைமுறைபடுத்த தங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.
    தங்கள் உண்மையுள்ள ....
    (தேர்வரின் கையொப்பம்)

    முடிந்த அளவில் புகைப்படம் இணைத்து அனுப்பவும்
    மேற்குறிப்பிட்ட விபரங்களை A4 தாளில் நிரப்பி கையொப்பமிட்டு தெளிவாக புகைபடமெடுத்து கீழ்கண்ட
    WhatsApp எண்ணிற்கு அனுப்பவும்.
    Cell No : 8012776142
    9500959482
    99426 61187
    90472 94417

    ReplyDelete
  2. Winners computerscience trb coaching centre erode.contact number 8072087722

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி