இதனால், ஊழியர்களுக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது. இவற்றை நிரப்பக்கோரி தொழிற்சங்கங்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. இதையடுத்து 400 கள உதவியாளர், 250 இளநிலை உதவியாளர், 300 கணக்கீட்டாளர், 300 மின்பிரிவு தொழில்நுட்ப உதவியாளர், 300 கட்டுமான பொறியாளர், 25 கட்டுமான உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.இதற்கான அறிவிப்பை மின்துறை அமைச்சர் தங்கமணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால், இதற்கான முறையான அறிவிப்பை மின்வாரியம் இதுவரை வெளியிடவில்லை.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 375 உதவி பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், ஏற்கெனவே உள்ள 2,175 காலி பணியிடங்களில் 525 தொழில்நுட்ப உதவியாளர் பணியைத் தவிர, மற்ற பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுவிட்டனர். விரைவில் 1,575 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்றார்.
Eanda engala pottu kolappuriya. Panam. Koduthal valai nu sollidu pogada
ReplyDelete