ஜாக்டோ - ஜியோ மறியல் :ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 22, 2018

ஜாக்டோ - ஜியோ மறியல் :ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்பு

ஜாக்டோ - ஜியோ சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மறியல் போராட்டம் நடந்தது. அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், மறியல் போராட்டம், நேற்று நடந்தது.
தமிழகத்தின் பல பகுதிகளை சேர்ந்த, ஆசிரியர்கள் மற்றும் அரசுஊழியர்கள், போராட்டத்தில் பங்கேற்றனர்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது; ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி, 2016 ஜனவரி முதல், ஊதிய உயர்வை அமல்படுத்தி, 21 மாத நிலுவைத் தொகையை வழங்குவது; இடைநிலை ஆசிரியர்களின், ஊதிய முரண்பாடுகளை களைவது ஆகிய, கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடந்தது.

சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன் திரண்ட, ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை, போலீசார் கைது செய்து, எழும்பூர், ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்திற்கு, அழைத்து வந்தனர். இந்நிலையில், வகுப்புகளை, 'கட்' அடித்து, ஆசிரியர்கள் சிலர் போராட்டத்தில் பங்கேற்றனர். அவர்களது பெயர் பட்டியலை, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் சேகரித்துள்ளனர்.

1 comment:

  1. 2014 சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க தேனி குமார் 9791565928

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி