டெல்லியில் பல்வேறு இடங்களில் புழுதிப் புயல் தாக்கியது : பள்ளிகளுக்கு இன்று விடுமுறை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 8, 2018

டெல்லியில் பல்வேறு இடங்களில் புழுதிப் புயல் தாக்கியது : பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!


டெல்லி, சண்டிகரை நள்ளிரவு புழுதி புயல் தாக்கியது. என்சிஆர், ரோஹ்தக், பிஹானி, ஜஜார், குருகுரம், பாக்தாத், மீரட் & காஜியாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் புழுதி புயல் தாக்கியுள்ளது.
இந்த புயலானது மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தில் நள்ளிரவு சுமார் 11.20 மணியளவில் தாக்கியது.
இதனை தொடர்ந்து டெல்லி, சண்டிகர், அரியானா மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. டெல்லியில் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால், மின்சாரம் தடைப்பட்டுள்ளது. சாலையில் விழுந்துள்ள மரங்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

20 மாநிலங்களில் மோசமான வானிலை நிலவக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து டெல்லியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 90 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மிகுந்த எச்சரிக்கையுடன் ரயில் இயக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 90 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் காற்று வீசினால், மெட்ரோ ரயில் சேவை நிறுத்திவைக்கப்படும் என்று டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோல் ராஜஸ்தானில் மீண்டும் புழுதிப் புயல் தாக்கியதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒரு சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி