கனமழை….பலத்த காற்று…. அடுத்த 5 நாட்களுக்கு தமிழநாட்டில் இது தான்…. உறுதியாக சொன்ன இந்திய வானிலை ஆய்வு மையம்… - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 10, 2018

கனமழை….பலத்த காற்று…. அடுத்த 5 நாட்களுக்கு தமிழநாட்டில் இது தான்…. உறுதியாக சொன்ன இந்திய வானிலை ஆய்வு மையம்…

கேரளா அருகே ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாகதமிழகம், கேரளா, கர்நாடகாஉள்ளிட்ட மாநிலங்களில், அடுத்த 5 நாள்களுக்கு பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

4 comments:

 1. 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி வழங்காத தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனத்தை தெரிவிக்கிறது.
  கடந்த 2013 ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி.ஜெ.ஜெயலலிதா அவர்களால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சுமார் (94,000)பேர் (இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்)இதுவரை பணி கிடைக்காமல் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.அரசு பள்ளிகளில் ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்பப்படும் போது ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்த அரசிடம் பல முறை வைக்கப்பட்டது.
  நீண்ட இடைவெளிக்கு பின் கடந்த ஜனவரி மாதம் இது குறித்த அரசாணை வெளியிடப்படும் என்ற உறுதிமொழி மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.கே.ஏ.செங்கோட்டையன் அவர்களிடம் இருந்து அளிக்கப்பட்டது.ஆனால் இது வரை செயல்வடிவம் பெறவில்லை என்பது ஏற்கனவே 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை தந்து கொண்டு இருக்கிறது.
  ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலையில் தற்போது 5 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்ட நிலையில் அரசு எந்த முடிவையும் அறிவிக்காத போது தேர்ச்சி பெற்ற 94,000 பேருக்கும் இது மிகுந்த அச்சத்தையும்,பெரும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது.
  ஆனால் அரசோ இவ்விஷயத்தில் மிகுந்த அலட்சியத்தோடு இவர்களை கையாளுகிறது.தேர்ச்சி பெற்ற இத்துனை ஆயிரம் பேருக்கும் உரிய பணி கிடைக்காவிட்டால் ஆசிரியர் தகுதித் தேர்வின் நோக்கத்தையே நிர்மூலமாக்குவதாகும்.

  எனவே 2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு காலிப்பணியிடங்களில் முன்னுரிமை வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டு அவர்களின் நீண்ட கால போராட்டத்திற்கும் பாதிக்கப்பட்ட 94,000 பேரின் குடும்ப சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் பொறுப்பு இந்த அரசுக்கு உள்ளது என்பதை இவ்வறிக்கை வாயிலாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பாக கடும் கண்டனத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

  -திரு.வேல்முருகன்.
  தலைவர்.
  (தமிழக வாழ்வுரிமைக் கட்சி).

  ReplyDelete
 2. நீங்க பேசுறது விதிகள் இருக்கிறதா... 2013 தேர்வர்கள் சார்பாக நீஙக முயற்சி எடுத்தால் 2017 தேர்வர்கள் கை கட்டிடு வேடிக்கை பார்ப்பாங்கனு நினைக்கிறீங்களா!!! ? ஆக மொத்தம் ஜென்மத்துக்கும் வேலையே எதிர்பார்க்க முடியாத நிலைமை வரும்... 2013 க்கு என்று பணிகள் வராது விதிமுறை 71 அடிப்படையில் மட்டுமே பணியிடம் நிரப்பப்படும்... ஒருவேளை மாறினால் மேற்கண்டவாறு நடக்கும்..
  முழு முன்னுரிமை கேட்பதை விடுத்து 2021 முடிவடையும் சான்றிதழ் காலத்தை மேலும் நீட்டிக்க வழிவகுக்கலாமே

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும் நீங்க ஒருவார்த்தை உபயோகப்படுத்தி இருக்கிறீங்களே 2013 ல் தேர்ச்சி பெற்று பணி கிடைக்காமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்னு... 2013 ல் 13000 பணியிடங்கள் நிரப்பியது போக நூலிழையில் தவற விட்டவர்கள் அநேகம் பேர் 2017 ம் தேர்ச்சி பெற்று இழந்த வாய்ப்பினை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்...இதை நீங்கள் அறிவீரா???
   நீங்கள் கூறுவது வேத வாக்கு என அநேகம் பேர் நம்பி அடுத்த வாய்பினை பயன்படுத்தாமல் தடை செய்து வேலை வரும் என எதிர்பார்த்து 2017 ல் தேர்வாகாமல் காத்திருக்க வைத்திருப்பது நியாயமா?
   ஒருவைளை 94000 பேருக்கு வேலை கிடைப்பதாக வைத்து கொள்வோம் அரசு எத்தனை வருடத்தில் அவ்வளவு பணியிடமும் நிரப்பும்.. தற்போது இருக்கும் பணியிடமே 2500 என்று தான் தகவல் வருகிறது..இதற்கான பதிலை உங்களை நம்பும் தேர்வர்களுக்கு கொடுக்க முடியுமா!!
   நாம் தேர்வு எழுதியது தேர்வு வாரியத்திற்கு அரசியல் தலைவருக்கு அல்ல !! அவர்களை சந்தித்து தேர்வு வழியை திசை திருப்புவது நியாயம் தானா!!

   Delete
  2. 2013 already selected candidates not appointed thats really sad Mr velmurugan said that selected candidates only than 2017 you all just completed verification you all need to get pass certificate from trb than only you all may eligible for selection process for teacher in govt school if govt need otherwise no way but 2013 already waiting 5years already govt clearly said at the time of appoinment all tet passed candidates consider for selection based on their weightage like that so no need to worry surely after the appoinment of that 2013 list only new notification will come for that selection all passed candidates are eligible among that if you have required weightage you will get job so dont aversion tension angry feeling on others just keep cool

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி