765 கணினி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 4, 2018

765 கணினி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு..
             வணக்கம். தமிழகத்தில் தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை வகுப்புகளியில் 765 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளதாக தாங்கள் 2017 ஆண்டு அறிவித்தீர்கள்.
ஆனால் அது தொடர்பாக இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் உள்ளது. தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலத்தில் கணினி ஆசிரியர்களாக 53,670 பேர் பதிவு செய்து உள்ளனர். இதில் இளநிலை கணினி அறிவியல் பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள் சுமார் 37,117 பேர் உள்ளனர். முதுநிலை கணினி அறிவியல் பட்டத்துடன் பி.எட் முடித்தவர்கள் சுமார் 16,553 பேர் உள்ளனர். கணினி ஆசிரியர் பணி நியமன தொடர்புக்காக பலமுறை முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. அரசு சார்பாக அனைத்தும் அரசின் கொள்கைக்குட்பட்டது என பதில் கூறப்படுகிறது. இதனால் கணினி ஆசிரியர்களின் ஆசிரியர் கனவு வெறும் கானல் நீராக உள்ளது.. இந்த கணினி ஆசிரியர் பணி நியமனத்தில் ஏற்கனவே பின்பற்றப்பட்ட விதிமுறைகளின் படி அல்லது வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக அல்லது தேர்வு மூலமாக அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை கணினி ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் பணி நியமனம் நடைபெற வேண்டும். இந்த 765 கணினி ஆசிரியர்கள் மட்டும் அல்லாமல் மீதம் உள்ள கணினி ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை கண்டறிந்து அதையும் இத்துடன் நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.  அரசின் கொள்கைமுடிவானது அணைத்து கணினி ஆசிரியர்கள் பயன்பெரும் வகையில் இருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
குளித்தலையிருந்து எம்.குணா  .....

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி