வேலையை இழந்த ஒரு மாதத்தில் 75% பிஎஃப் தொகை பெறலாம் : புதிய விதிமுறையை அமல்படுத்த இபிஎஃப்ஓ முடிவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2018

வேலையை இழந்த ஒரு மாதத்தில் 75% பிஎஃப் தொகை பெறலாம் : புதிய விதிமுறையை அமல்படுத்த இபிஎஃப்ஓ முடிவு

வேலையை இழந்த ஒரு மாதத்திலேயே  வருங்கால வைப்பு நிதி(பிஎஃப்)யில் இருந்து 75% பெறும் சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 30 நாட்களுக்கு மேல் வேலை இல்லாமல் இருந்தால் ஓய்வூதியத்திற்காக((பிஎஃப்)) சேமித்த தொகையில் 75%தொகையை உறுப்பினர்கள் திரும்பப் பெறும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.

இதற்கான விதிகளில் திருத்தங்களை செய்ய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவரும், தொழிலாளர் துறை அமைச்சருமான சந்தோஷ் குமார் கஙவாட் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நடைமுறைப்படி வேலை இழந்த 2 மாதத்தில் தான் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும். அதுவும் முழு தொகையை எடுத்து விட்டு அந்த கணக்கை மூட வேண்டும்.ஆனால் இனிமேல் வேலை இழந்த 1 மாதம் ஆகி இருந்தால் 75% தொகையை கணக்கில் இருந்து எடுத்து கொள்ளலாம். மீதமுள்ள 25% தொகையின் மூலம் தொழிலாளரின் வருங்கால வைப்பு நிதிக் கணக்கு உயிர்ப்புடன் இருக்கும். இதற்காக 1952ம் கொண்டுவரப்பட்ட தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சட்டத்தில் திருத்தும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி