BE - தமிழகத்தில் 11,500 ஆசிரியர்கள் வேலை இழப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2018

BE - தமிழகத்தில் 11,500 ஆசிரியர்கள் வேலை இழப்பு!

பொறியியல் கல்லூரிகளில் 15 மாணவர்களுக்கு1 ஆசிரியர் என்ற விகிதத்தை 20 மாணவர்களுக்கு 1 ஆசிரியர் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மாற்றி அமைத்துள்ளது.
இதனால் தமிழகத்தில் சுமார் 12,000 பேர் வேலை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொறியியல் கல்லூரிகளில் 15 மாணவர்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளை வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில் இதனை 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என மாற்றம் செய்துள்ளது. தமிழகத்தில் 550 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 2 லட்சத்து 73000 இடங்கள் உள்ளன. இந்த கல்லூரிகளில் சேர மாணவர்கள் போதிய ஆர்வம் காட்டுவதில்லை.

 இந்த நிலையில் 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் இருந்தால் போதுமானது என்று கில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 11,500 ஆசிரியர்கள் வேலை இழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி