சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் - முதல்வரை சந்திக்க முடிவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2018

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் - முதல்வரை சந்திக்க முடிவு!

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கும் அறிவிப்பை செயல்படுத்த வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய சத்துணவு ஊழியர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய தலைவர் சுப்ரமணியம் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் லட்சுமேஸ்வரி, செயலாளர் ஜோதிமணி முன்னிலை வகித்தனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சட்டசபையில், 110 விதியின் கீழ், 'சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கப்படும்,' என அறிவித்தார். அந்து அறிவிப்பை நடைமுறைப்படுத்த வேண்டும். குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜூலை, 6ம் தேதி சென்னையில் முதல்வரை சந்தித்து பேசுவதென மாநில தலைமை முடிவு செய்துள்ளது.

ஒன்றிய அளவிலான சங்க உறுப்பினர்கள், சென்னையில் முதல்வரை சந்திக்கும் பெரும்திரள் முறையீடு நிகழ்ச்சியில் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டது.கூட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் சாமிகுணம், சத்துணவு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி