கேட்' எனப்படும் மேலாண்மை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு, நவ., 25ல் நடைபெறம். - kalviseithi

Jul 29, 2018

கேட்' எனப்படும் மேலாண்மை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு, நவ., 25ல் நடைபெறம்.

'கேட்' எனப்படும் மேலாண்மை படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு, நவ., 25ல் நடைபெற உள்ளது.
மேற்கு வங்க தலைநகர், கோல்கட்டாவில் உள்ள, ஐ.ஐ.டி., வெளியிட்டுள்ள அறிவிப்பு:மேலாண்மை படிப்புக்கான, 'கேட், ௨௦௧௮' பொது நுழைவுத் தேர்வு, நவ., ௨௫ல் நடைபெறும். நாடு முழுவதும் ௧௪௭ நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இந்த தேர்வுக்கு, ஆக., 8 முதல் பதிவு செய்யலாம். செப்., 19, கடைசி நாள்.நான்கு தேர்வு மையங்களை விருப்ப அடிப்படையில் தேர்வு செய்யலாம். முதலில் குறிபிட்டுள்ள மையம் ஒதுக்கீடு செய்ய இயலாவிட்டால், அடுத்தடுத்த மூன்று மையங்கள் பரிசீலனை செய்யப்படும்.விண்ணப்பதாரர்கள், அக்., ௨௪ முதல், தேர்வு மைய நுழைவுச் சீட்டை, இணைய தளத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களை iimcat.ac.in. இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி