பழங்குடியின ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்த மாணவரை, மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்குக்கு அனுமதிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2018

பழங்குடியின ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்த மாணவரை, மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்குக்கு அனுமதிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

பழங்குடியின ஜாதி சான்றிதழுக்கு விண்ணப்பித்த மாணவரை, மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்குக்கு அனுமதிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த, வெங்கடேசன் தாக்கல் செய்த மனு:நாங்கள், பழங்குடியின சமூகமான, 'குறுமர்' இனத்தைச் சேர்ந்தவர்கள்; என் மகன் பரதன், பிளஸ் ௨ தேர்விலும், 'நீட்' தேர்விலும் நல்ல மதிப்பெண்கள் பெற்றுள்ளான்.குறுமர் ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த மனு, தர்மபுரி மாவட்ட வருவாய் கோட்ட அதிகாரியிடம் நிலுவையில் உள்ளது. சான்றிதழ் கிடைக்க, ௧௦ நாட்களாகும்.எனவே, ஜாதி சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி வற்புறுத்தாமல், பழங்குடியின பிரிவுக்கான ஒதுக்கீட்டின் கீழ், என் மகனை மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை, நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஆர்.துரைசாமி ஆஜரானார்.

நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'ஜாதி சான்றிதழை வற்புறுத்தாமல், பழங்குடியின பிரிவுக்கான ஒதுக்கீட்டின் கீழ், கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். 'சான்றிதழ் கிடைத்த உடன், அதை சமர்ப்பிக்க வேண்டும். ஜாதி சான்றிதழ் பொய்யானது என, பிற்காலத்தில் தெரிய வந்தால், மனுதாரரின் தகுதி செல்லாதது ஆகி விடும்' என, கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி