CBSE - பள்ளிகளில் புத்தக கடைக்கு அனுமதி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2018

CBSE - பள்ளிகளில் புத்தக கடைக்கு அனுமதி!

சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் வளாகங்களில், புத்தக விற்பனை கடைகள் திறக்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., என்ற, மத்திய இடைநிலை கல்வி வாரிய பள்ளிகளில்,
பாடம் நடத்துவதை தவிர, வேறு எந்தவித வணிக நடவடிக்கைகளிலும் ஈடுபடக் கூடாது என, தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், டில்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி, சி.பி.எஸ்.இ., நிர்வாகம் புதியசுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: சி.பி.எஸ்.இ., பள்ளி களில், சிறிய பெட்டி கடை போன்று, புத்தக விற்பனை கடை திறக்கலாம்.

அவற்றில், என்.சி.இ.ஆர்.டி., என்ற, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பாடத்திட்ட புத்தகங்கள், மற்ற பாட புத்தகங்கள், 'ஸ்டேஷனரி' பொருட்களை விற்பனை செய்யலாம். ஆனால், மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம், தங்கள் பள்ளியில் உள்ள கடைகளில் மட்டுமே, பொருட்கள் வாங்க வேண்டும் என, கட்டாயப்படுத்தக் கூடாது. இந்த கடையை வணிக ரீதியான பயன்பாட்டுக்கும் மாற்றக் கூடாது. இதுகுறித்து, பள்ளிகள் மீது புகார் வந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. 12 ஆம் வகுப்பு வரை தேவையே இல்லாமல்(அந்த பாடத்திட்டத்ததைக்கொண்டு பணம் அல்லது பொருளீட்டும் முறையோ அல்லது மனிதாபிமானத்தையோ கற்பிக்காமல்) கடுமையான பாடத்திட்டத்தைவைத்து நேரம் போதாமல் படித்தாக வேண்டும் என்ற நிலையில் புத்தக நிலையமோ நூலகமோ வைத்து என்ன பயன்???

    7 வயதில் பள்ளியில் சேரத்து 12 வயது வரை பொதுக்கல்வியை வழங்கி 13 வயது முதல் திறமைக்கும் விருப்பத்திற்கும் கல்வி கொடுக்கும் நாட்டில் 24 வயதில் பில்லியனர்ஸ் ஆகிறார்(மார்க் ஜூகர் பெர்க்).
    நமது நாட்டில் 30 வயதிலும் வருமானத்திற்கு திண்டாடும் நிலை..வேதனை....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி