TNPSC - Group IV Online Certificate Upload | குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அரசு சேவை மையத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய 18-ந்தேதி கடைசி நாள் என அறிவித்துள்ளது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 30, 2018

TNPSC - Group IV Online Certificate Upload | குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் அரசு சேவை மையத்தில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய 18-ந்தேதி கடைசி நாள் என அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குரூப்-4 தேர்வில் அடங்கிய பதவிகளுக்கான எழுத்து தேர்வை அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி அதன் முடிவுகளை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது.

சான்றிதழ் பதிவேற்றம் செய்யவேண்டிய விண்ணப்பதாரர்களின் பட்டியல் சமீபத்தில் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் ( www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டது.

இவர்களுக்கு விண்ணப்ப படிவத்தில் பதிவு செய்துள்ள செல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு செய்தி அனுப்பப்பட்டு உள்ளது. அவ்வாறு சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகள் அடங்கிய குறிப்பாணையின் நகலுடன் இன்று (வியாழக்கிழமை) முதல் செப்டம்பர் 18-ந்தேதி வரை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இசேவை மையங்களில் மட்டுமே சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும். இச்சேவைக்கென தெரிவு செய்யப்பட்டுள்ள அரசு இசேவை மையங்களின் முகவரிகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 044- 25300336, 044- 25300337 என்ற தொலைபேசி எண்களிலும் மற்றும் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலை பேசியிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

2 comments:

  1. *இலவச மாதிரி உடல் தகுதித் தேர்வு*

    *(Model physical Test)*

    தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம்,
    தீர்த்தமலை அருகிலுள்ள பாளையத்தில் உள்ள
    ஸ்ரீஅம்மன் போலீஸ் கோச்சிங் சென்டரின்
    *இலவச மாதிரி உடல் தகுதித் தேர்வு*

    *(Model physical Test)*
    ������������

    *�� 2018 ஆம் ஆண்டின் 6140 காலிப் பணியிடங்களுக்கான காவலர் (POLICE) தேர்வின் உடற்தகுதித் தேர்வுக்கான தினசரி காலை,மாலை என இரு வேளைகளிலும் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது.*

    நமது மையத்தின்
    *இலவச மாதிரி உடற்தகுதித் தேர்வு*

    *02.09.2018*
    *ஞாயிறுக்கிழமை*

    அன்று காலை 6:30 மணிக்கு
    *பாளையத்தில் உள்ள ஸ்ரீஅம்மன் போலீஸ் கோச்சிங் சென்டரின் மைதானத்தில்*

    (பாளையம் To தீர்த்தமலை செல்லும் வழியில்) *நடைபெறுகிறது.*

    *♦ அனுமதி இலவசம் (அன்று மட்டும்)*

    *♦ மாதிரி உடற் தகுதித் தேர்வுக்கு வரும் மாணவர்கள் அழைப்பு கடிதத்தின் (PET HALL TICKET XEROX COPY) நகலை கொண்டு வரவும்.*


    ����������������
    ஆண்களுக்கான உடற் தகுதித் தேர்வுகளான

    *✅ உயரம் அளத்தல்,*

    *✅ மார்பளவு அளத்தல்,*

    *✅ 1500மீ தகுதித் தேர்வு ஓட்டம்,*

    *✅ கயிறு ஏறுதல்,*

    *✅ நீளம் தாண்டுதல்*,

    *✅ 100/400மீ ஓட்டங்கள்*

    ����������������

    பெண்களுக்கான உடற் தகுதித் தேர்வுகளான

    *✅ உயரம் அளத்தல்,*

    *✅ 400மீ தகுதித் தேர்வு ஓட்டம்*

    *✅ நீளம் தாண்டுதல்,*

    *✅ கிரிகெட் பந்து எறிதல்,*

    *✅ 100/200மீ ஓட்டங்கள்*

    போன்ற உடற் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு மதிப்பெண் கணக்கிட்டு *15க்கு நீங்கள் பெறும் மதிப்பெண்களை* தங்களுக்கு தெரிவிக்கப்படும்.

    ����������������
    எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த மாதிரி உடற் தகுதித் தேர்வில் கலந்துக் கொண்டு

    *தங்களை சுய மதிப்பீடு* செய்து கொள்ளலாம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டு,

    வாழ்த்துக்களுடன் வரவேற்கிறோம்.

    விதிகள்:
    1.உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள்,
    சுவாசக் கோளாறு, இதயக் கோளாறு,
    எலும்பு முறிவு போன்றவைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தேர்வில் பங்கேற்க இங்கு அனுமதி கிடையாது.

    2.தேர்வின் போது அணியும் ஆடைகளான லோயர்,சாட்ஸ்,டி சர்ட் நீங்களே எடுத்து வரவும்.

    *3.எந்த மாவட்டத்தில் இருந்தும் வரலாம்.*

    *4.முன் பதிவு அவசியம்.*

    ����������������

    இப்படிக்கு

    பாளையம் *ஸ்ரீஅம்மன் போலீஸ் கோச்சிங் சென்டர்*
    பாளையம் (Vill) அரூர் TK , தருமபுரி Dt /

    சிங்காரப்பேட்டை ஊத்தங்கரை (TK) கிருஷ்ணகிரி Dt.
    தொடர்புக்கு : *9655447714/ 9655447715*

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி