ரூ.1க்கு சியோமி ஸ்மார்ட் போன் - தீபாவளி சிறப்பு சலுகை அக் 23 முதல் துவக்கம்.! - kalviseithi

Oct 21, 2018

ரூ.1க்கு சியோமி ஸ்மார்ட் போன் - தீபாவளி சிறப்பு சலுகை அக் 23 முதல் துவக்கம்.!


சியோமி நிறுவனம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தந்து வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பு சலுகை விற்பனையைத் துவங்கவுள்ளது.

சியோமி நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும், சிறப்பு பிரத்தியேக சலுகை வழங்கப்பட்டுள்ளது.

சியோமிஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் தயாரிப்புகள் அனைத்திற்கும் பல சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.தீபாவளி சிறப்பு சலுகை விற்பனைஇந்தச் சிறப்பு தீபாவளி சலுகை விற்பனை வரும் அக்டோபர் 23 ஆம் தேதி முதல் துவங்கி அக்டோபர் 25 ஆம்தேதி வரை நடைபெறுமென்று சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விற்பனையின் போது ரூ.75 க்கு மேல் செய்யக்கூடிய அனைத்து எஸ்.பி.ஐ கிரடிட் மற்றும் டெபிட் கார்டு பரிவர்த்தனைக்கு ரூ.750 வரையிலான கேஷ் பேக் சலுகை வழங்கப்படுமென்று தெரிவித்துள்ளது. இதே போன்று பேட்டியம், அமேசான் பே மற்றும் மொபிவிக் ஆகிய செயலி மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் கேஷ் பேக் சலுகை உண்டு.ஸ்மார்ட் போன்களுக்கான சலுகைகள்:சியோமி ரெட்மி ஒய் 2, ரெட்மி நோட் 5 ப்ரோ, போக்கோ எப்1, ரெட்மி 6 சீரிஸ் மற்றும் மி ஏ2 ஸ்மார்ட் போன்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து மாடல் ஸ்மார்ட் போன்களுக்கும் ரூ.2000 உடனடி சலுகை வழங்கப்பட்டுள்ளது. ரெட் வேரியண்ட் ஸ்மார்ட் போன்களுக்கும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ வெறும் ரூ.12,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- சியோமி ரெட்மி ஒய் 2 வெறும் ரூ.10,999 க்கு விற்பனைசெய்யப்படுகிறது.
- சியோமி ரெட்மி மி ஏ2 வெறும் ரூ.14,999 க்கு விற்பனைசெய்யப்படுகிறது.

சலுகை விலையில் கிடைக்கும் சியோமி தயாரிப்புகள்:

- 10,000 எம்.ஏ.எச், சியோமி மி பவர் பேங்க் கிரேய் நிறவேரியண்ட் ரூ.699
- 10,000 எம்.ஏ.எச், சியோமி மி பவர் பேங்க் ரெட் நிற வேரியண்ட் ரூ.899
- சியோமி மி பேன்டு எச்.ஆர்.எக்ஸ் வெறும் ரூ.999
- சியோமி மி பேன்டு 3 வெறும் 1,999
- சியோமி மி காம்பெக்ட் ஸ்பீக்கர் 2 வெறும் ரூ.799
- சியோமி மி இயர் போன்ஸ் வெறும் ரூ.349
- சியோமி காம்போ இயர் போன்ஸ் மற்றும் கேஷுவல் பேக்பாக் ரூ.899
- சியோமி மி ஹோம் செக்யூரிட்டி கேமரா வெறும் ரூ.2,699
- சியோமி மி ஸ்மார்ட் டிவி 4ஏ 43 வெறும் ரூ.22,999

ரூ.1-பிளாஷ் சேல் விற்பனை

இந்தச் சிறப்பு பண்டிகை சலுகை விற்பனையில், ரூ.1 க்குசியோமி ஸ்மார்ட் போன் மற்றும் அனைத்து தயாரிப்புகளும் பிளாஷ் சேல் விற்பனையில் விற்பனை செய்யப்படுமென்றும் சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி