தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, மாநில அரசு பணியாளர்கள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு ஊக்க தொகை அறிவிக்கப்படும்.
அவ்வகையில், புதுச்சேரி மாநில அரசில் இருக்கும் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு 6 ஆயிரத்து 908 ரூபாய் தீபாவளி போனஸ் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு துறைகளில் மூன்றாண்டுகளுக்கு மேலாக தினக்கூலி ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு 1,184 ரூபாய் போனசாக வழங்கப்படும். இதனால், அரசுக்கு கூடுதலாக 18 கோடி ரூபாய் செலவாகும் என்று புதுவை முதலமைச்சர் நாராயணசாமி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதர பொதுத்துறை ஊழியர்களுக்கான உற்பத்திசார்ந்த போனஸ் தொகை மத்திய அரசு அறிவிக்கும் விகிதாச்சாரத்தின்படி கணக்கிட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது
Tamilnadu government?
ReplyDeleteTamilnadu Government - All Matters - Varum Aanaal Varaathu....
Deleteதொழிலாளருக்கு தான் போனஸ், ஊழியர்களுக்கு தர வேண்டும் என்று கட்டாயம் கிடையாது எப்ப பாரு பணம், பணம்
ReplyDeleteKarupu aadu varuthu ....
ReplyDelete