மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப்போட்டியில் மூன்றாமிடம் பெற்ற ஈரோடு மாவட்டம் கல்கடம்பூர் அரசுப்பள்ளி மாணவி - kalviseithi

Oct 11, 2018

மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப்போட்டியில் மூன்றாமிடம் பெற்ற ஈரோடு மாவட்டம் கல்கடம்பூர் அரசுப்பள்ளி மாணவி


ஸ்ரீராம் திருக்குறள் இலக்கியக்கழகத்தின் சார்பாக மாநில அளவிலான திருக்குறள் பேச்சுப்போட்டி சென்னையில் 06/10/2018 அன்று நடைபெற்றது.

தமிழ்நாடு முழுவதும் 10 மையங்களிலிருந்து முதலிடம் பெற்ற மாணவர்கள் மாநில அளவிலான இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

தமிழ்நாடு முழுவதும் 1069 மாணவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இறுதிப்போட்டியில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கல்கடம்பூர் மலைப்பகுதியைச்சார்ந்த அரசு மேனிலைப் பள்ளி எட்டாம் வகுப்பு  மாணவி கு.ஜெயந்தி மூன்றாம் பரிசுக்கான கேடயமும் ரொக்கப்பரிசு ரூ.5000 பெற்றார்.

இத்துடன் ரூ.3333 மதிப்பிலான புத்தகங்கள் பள்ளிக்கு பரிசாக வழங்கப்பட்டன.

வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவியை அனைவரும் பாராட்டினார்கள்.

இப்போட்டியை மக்கள் தொலைக்காட்சி நவம்பர் மாதத்தின் வாரங்களில் ஒளிபரப்ப உள்ளது..

நன்றி
அரசு மேனிலைப் பள்ளி
கல்கடம்பூர்
சத்தியமங்கலம்
ஈரோடு மாவட்டம்.
9944153366

5 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி