விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பொறுப்பேற்ற4 மாதத்தில் அரசுப் பள்ளியில் 40 சதவீதம் மாணவர் சேர்க்கையை அதிரித்துக் காட்டியுள்ளார் தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் வித்தியாரம்பம் என்னும் ஏடு தொடங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் முன்னிலையில், வட்டாரக் கல்வி அலுவலர் கோ.விஜயலட்சுமி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.ஆசிரியை க.ரோஸ்லினா வரவேற்றார்.வட்டார வளமைய மேற்பார்வையாளர் எஸ்.மாடசாமி நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:
பள்ளிகளில் பொதுவாக ஜூன் முதல் தேதி அல்லது முதல் வாரத்தில் 90 சதவீத மாணவர்களை பெற்றோர் பள்ளியில் சேர்த்து விடுவார்கள்.இப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் ஜூன் 18 ம் தேதி பதவி உயர்வில் பொறுப்பேற்றுள்ளார். இப் பள்ளி மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு, மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் தனது செலவில் இலவசமாககராத்தே, யோகா, சிலம்பம் போன்ற பயிற்சிகளை அளிக்க ஏற்பாடு செய்து நடத்தி வருகிறார். மேலும் மாணவர்களுக்கு கணினி வழியே கல்வி கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார்.
இதன் பயனாக வேறு பள்ளிகளில் படித்த மாணவ மாணவியர் இப் பள்ளிக்கு வந்துள்ளார்கள். தான் பொறுப்பேற்ற 4 மாதத்தில் 40 சதவீதம் மாணவர் சேர்க்கையை உயர்த்தி காண்பித்துள்ளார். மேலும் பள்ளி நலனில் அக்கறை கொண்டு வித்தியாரம்பம் நிகழ்ச்சியை பள்ளியில் நடத்தி இன்றும் மாணவர் சேர்க்கை செய்துள்ளார்.
மாணவர்கள் மற்றும் கிரா்ம மக்கள் தலைமை ஆசிரியர் மற்றும் பணிபுரியும் ஆசிரியையின் சிறப்பான சேவைகளைப் பயன்படுத்தி கல்வியில் மேலும் மேம்பட வேண்டும் என்றார்.பின்னர் மஞ்சள் தடவப்பட்ட பரப்பி வைக்கப்பட்ட நெல் மணியில் புதியதாக சேர்ந்துள்ள மாணவர்கள் விரல் பிடித்து அ என்ற எழுத்தை ஆசிரியை ரோஸ்லினா எழுத வைத்து ஏடு தொடங்கினார்.நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி கா.மாரீஸ்வரி, கிராமத் தலைவர் வேல்ச்சாமி, மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.
சரி ஓகே, அத ஏன் உக்காந்துகிட்டே சொல்லி குடுக்குரிங்க. . .
ReplyDelete