CBSE பள்ளிகளுக்கு பொதுத் தேர்வு எப்போது ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 9, 2018

CBSE பள்ளிகளுக்கு பொதுத் தேர்வு எப்போது ?


பொதுத் தேர்வுக்கான தேதி, இன்னும் அறிவிக்கப்படாததால், சி.பி.எஸ்.இ., மாணவர்கள் குழப்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழக பாட திட்டத்தில், பொதுத் தேர்வுகள் எப்போது நடக்கும்; எப்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் என, கல்வி ஆண்டு துவங்கும் போதே, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு, மாணவர்கள் திட்டமிட்டு படிக்க, வசதியாக உள்ளது.ஆனால், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பொது தேர்வுக்கான தேதி, இன்னும் அறிவிக்கப்படவில்லை.டில்லி உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி, முடிவு களை அறிவிக்க, சி.பி.எஸ்.இ.,க்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, தொழிற்கல்வி மாணவர்களுக்கு பிப்ரவரியிலும், மற்ற மாணவர்களுக்கு மார்ச்சிலும், தேர்வுகள் துவங்கும் என, சி.பி.எஸ்.இ., ஏற்கனவே அறிவித்தது.ஆனால், தேர்வுக்கான தேதி, இன்னும் அறிவிக்கப்படவில்லை. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2க்கு, எப்போது தேர்வுகள் துவங்கும் என்பது தெரியாமல், மாணவர்கள் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். தேர்வுகள் துவங்கும் தேதியை, விரைந்து அறிவித்தால், திட்டமிட்டு படிக்க வசதியாக இருக்கும் என, மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி