10ம் வகுப்பு தேர்வு செய்முறை பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2019

10ம் வகுப்பு தேர்வு செய்முறை பயிற்சி


பத்தாம் வகுப்பு தனி தேர்வர்களுக்கான, செய்முறை பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், பங்கேற்கும் தனி தேர்வர்களுக்கு, ஏற்கனவே, செய்முறை பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. அதில், பங்கேற்க தவறியவர்கள், நாளைமுதல், 14ம் தேதி வரை, ஞாயிறு தவிர மற்ற நாட்களில், மாவட்ட கல்வி அதிகாரிகளை அணுகி, செய்முறை பயிற்சி வகுப்புக்கு, பதிவு செய்ய வேண்டும்.அதிகாரிகள் ஒதுக்கீடு செய்யும் பள்ளிகளுக்கு சென்று, அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் பங்கேற்க வேண்டும். மேலும், செய்முறை பயிற்சிக்கு கட்டணம் செலுத்திய ரசீதை, தேர்வு துறை சேவை மையத்தில் சமர்ப்பித்து, நாளை முதல், 14க்குள், தேர்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பத்தை, பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி