பள்ளிக்கல்வி துறை 'டிவி' ஜன.21 முதல் ஒளிபரப்பு - kalviseithi

Jan 4, 2019

பள்ளிக்கல்வி துறை 'டிவி' ஜன.21 முதல் ஒளிபரப்பு


தமிழக பள்ளி கல்வி துறையின் 'டிவி' சேனல் ஒளிபரப்பு வரும் 21ம் தேதி முதல் துவங்குகிறது. தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், கல்வி தொலைக்காட்சி துவங்கப்பட்டு உள்ளது.

பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின்படி, பள்ளி கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் மேற்பார்வையில், இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையிலான குழுவினர், 'டிவி' பணிகளை மேற்கொண்டுள்ளனர்.சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், தொலைக்காட்சிக்கான, 'ஸ்டுடியோ' அமைக்கப்பட்டுள்ளது. நவீன வகை கேமராக்கள், படப்படிப்பு கருவிகள், ஆளில்லாவிமானம் ஆகிய வசதிகளுடன், படப்பிடிப்புகள் நடத்தப்படுகின்றன.தினமும், 15க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள், எட்டு மணி நேரம் ஒளிபரப்பாகும். தினமும், இரண்டு முறை மறு ஒளிபரப்பு செய்யப்படும். இந்த நிகழ்ச்சிகள், 'யூ டியூப்'பிலும் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

பள்ளிகளின் பராமரிப்பு, சிறந்த உள்கட்டமைப்பு உள்ள பள்ளிகள், அரசு பள்ளிகளில் ஜொலிக்கும் ஆசிரியர்கள், சிறந்த திறன்களை வெளிப்படுத்தும் மாணவர்கள், கல்வி உதவி தொகை விபரம், அரசு திட்டங்கள், கல்வி செய்திகள் என, பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, தமிழக அரசு கேபிள், 'டிவி'யில், 200ம் எண் ஒதுக்கப்பட்டுள்ளது.வரும், 21ம் தேதி முதல் ஒளிபரப்பை துவங்க, பள்ளி கல்வி துறை திட்டமிட்டுஉள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி