53 தலைமையாசிரியர் பணியிடம் கேள்விக்குறி: வருகிறது பள்ளிகள் ஒருங்கிணைப்பு திட்டம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2019

53 தலைமையாசிரியர் பணியிடம் கேள்விக்குறி: வருகிறது பள்ளிகள் ஒருங்கிணைப்பு திட்டம்!!


கோவையில், 53 பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்படுவதால், அங்குள்ள தொடக்கப்பள்ளி தலைமையாசிரியரை, கற்பித்தல் பணிகளில் ஈடுபடுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகம் முழுக்க, ஒரே வளாகத்தில் செயல்படும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியல் திரட்டப்பட்டுள்ளது.இதில், 3 ஆயிரத்து 133 பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளன.

இங்கு, தொடக்க வகுப்புகளுக்கு தனியாகவும், உயர்நிலை அல்லது மேல்நிலை வகுப்புக்கு தனியாகவும் என, இரு தலைமையாசிரியர்கள் உள்ளனர்.ஒரே வளாகத்தில் செயல்படும் இரு பள்ளிகளுக்கு, இரு தலைமையாசிரியர்கள் இருப்பதால், நிர்வாக ரீதியாக, சில சிக்கல்கள் இருப்பது தெரியவந்துள்ளது.எனவே, ஒரு தலைமையாசிரியரின் கீழ், அனைத்து வகுப்புகளையும் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோவையில், 53 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன.இங்குள்ள தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களை, கற்பித்தல் பணிகளில் ஈடுபடுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.இதோடு, ஒரே தலைமையாசிரியர், உதவி தலைமையாசிரியர் மூலம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

சி.இ.ஓ.,க்கள் கருத்துசென்னையில் சமீபத்தில் நடந்த, முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில், முதன்மை செயலாளர் பிரதீப்யாதவ் இது குறித்து விவாதித்துள்ளார்.தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில், இனி ஒரு தலைமையாசிரியர் பணியிடம் மட்டுமே உருவாக்கலாம்என, இக்கூட்டத்தில் சி.இ.ஓ.,க்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை கல்வித்துறை பின்பற்ற முடிவெடுத்துள்ளது.

அதிகாரபூர்வ தகவல் வந்தால் தெரியும்'மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணனிடம் கேட்டபோது,''கோவையில் 53 பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்படுகின்றன. இதன் பட்டியலை, வட்டார வாரியாக, இயக்குனரகத்துக்கு சமர்ப்பித்துள்ளோம்.

தலைமையாசிரியர்களை கற்பித்தல் பணிகளில், ஈடுபடுத்துவது குறித்து, அதிகாரபூர்வ தகவல் வெளியிட்டால் தான் தெரியவரும்,'' என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி