'யு டியூப்'பில் பாடம் படிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2019

'யு டியூப்'பில் பாடம் படிக்கலாம்

'
சிறந்த ஆசிரியர்களை பாடம் நடத்த வைத்து, அதை படம் பிடித்து, 'யு டியூப்'பில் பதிவேற்றம் செய்ய, நடவடிக்கை எடுத்து வருகிறோம்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

அமைச்சர், செங்கோட்டையன்:

பதிப்பகங்களில் இருந்து, புதிய நுால்கள் வாங்க, குழு அமைக்கப்பட்டுள்ளது. புதிய நுால்களை கொள்முதல் செய்ய, கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அண்ணா நுாற்றாண்டு நுாலகத்திற்கு நுால்கள் வாங்க, ஆறு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு, ஸ்டுடியோவும் அமைக்கதிட்டமிடப்பட்டுள்ளது.

அந்த ஸ்டுடியோவில், சிறந்த ஆசிரியர்களை பயன்படுத்தி பாடம் நடத்தி, அதை வீடியோவில் பதிவு செய்து, 'யு டியூப்' வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய, முடிவு செய்துள்ளோம்.பள்ளி மாணவர்கள், தங்கள் மொபைல் போன்களில், அவற்றை பதிவிறக்கம் செய்து படிக்கலாம். 'சிடி'யாக வெளியிடவும் முடிவுசெய்துள்ளோம்.அதேபோல், ஓலைச்சுவடிகளில் உள்ளதை, புத்தகமாகவும், 'சிடி'யாகவும் வெளியிட, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

மதுரையில், 5 கோடி ரூபாய் மதிப்பில், தமிழன்னை சிலை அமைக்கப்படவுள்ளது.இவ்வாறு, விவாதம் நடந்தது.

2 comments:

  1. you tube a kaaranam kati irukira vacancy la oru 1000 a kuraipinga..aama you tube teaching iruke atha pathu student padikatum..apuram ethuku posting nu solavaringa..ha ha he he hoo hoo hey hey..😁😃😁😀

    ReplyDelete
  2. Enga pasanga YouTube la padikava ADMK ku vote pottanga tamilnadu peoples

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி