மேல்நிலை வகுப்புகளுக்கு திடீரென மாற்றப்பட்ட வினாத்தாள் வடிவமைப்பு: கணித ஆசிரியர்கள் அதிர்ச்சி - kalviseithi

Jan 13, 2019

மேல்நிலை வகுப்புகளுக்கு திடீரென மாற்றப்பட்ட வினாத்தாள் வடிவமைப்பு: கணித ஆசிரியர்கள் அதிர்ச்சி


தமிழகத்தில் மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தற்போது மேல்நிலை வகுப்புகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டிருப்பது கணித ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளன. மேலும் மொத்த மதிப்பெண்கள் 600 ஆக குறைக்கப்பட்ட நிலையில், பிளஸ் 1 பொதுத் தேர்வு புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் முதல் முறையாக நடைபெறுகிறது. செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களுக்கு 90 மதிப்பெண்களுக்கும், செய்முறைத் தேர்வு உள்ள பாடங்களுக்கு 70 மதிப்பெண்களுக்கும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களுக்கு ஒரு மதிப்பெண்ணில் 20 கேள்விகளும், குறு வினாக்கள் பிரிவில் 2 மதிப்பெண்ணில் 7 கேள்விகளும், சிறு வினாக்களுக்கு 3 மதிப்பெண்ணில் 7 கேள்விகளும், பெரு வினாக்கள் 5 மதிப்பெண்ணில் 7 கேள்விகளும் என 90 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம் பெறும். செய்முறைத் தேர்வு இல்லாத கணித பாடத்துக்கு ஒரு மதிப்பெண் வினாக்கள் 20 இடம் பெற்றுள்ள நிலையில், இந்த 20 வினாக்களும் கொள்குறி வகையில், அதாவது சரியான விடையைத் தேர்வு செய்து பதிலளிக்கும் வகையில் இடம் பெற்றிருந்தன.இந்த வினாத்தாள் வடிவமைப்பு முறையில்தான் அரையாண்டுத் தேர்வு, திருப்புதல் தேர்வுகளின் வினாக்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த நிலையில் அரசு தேர்வுகள் இயக்ககம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் 3-ஆம் தேதியிட்டு அனுப்பியுள்ள உத்தரவில், அனைத்து பாட வினாத்தாள்களின் வடிவமைப்பு முறையை வரையறுத்துள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள விதத்தில்தான் பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதில், செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களுக்கான முதல் 20 மதிப்பெண்களுக்கான வினாத்தாள் வடிவமைப்பில், கொள்குறி வகை வினாக்களுக்கு பதிலாக, சரியானவற்றைப் பொருத்துக, கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியான- தவறான இணைகளைக் கண்டறிக, கூறப்படும் கருத்துக்கான காரணத்தை எழுதுவது, சரியான - தவறான வாக்கியங்களைத் தேர்வு செய்வது என்பது போன்ற வடிவ வினாக்கள் இடம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திடீர் அறிவிப்பால் செய்முறைத் தேர்வு இல்லாத பாட ஆசிரியர்கள், குறிப்பாக கணிதப் பாட ஆசிரியர்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள் என்கிறார் தமிழ்நாடு கணித முதுகலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில நிறுவனத் தலைவர் வி.விஜயகுமார்.இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:பிளஸ் 1 தேர்வு புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் முதல் முறையாக நடத்தப்படுகிறது.

வினாத்தாள் எப்படி இருக்கும் என்பதற்கான மாதிரிகள் கூட ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. கல்வியாண்டின் தொடக்கத்தில் வழங்கப்பட்ட பழைய முறைப்படிதான் ஆசிரியர்கள் பாடம் நடத்தியுள்ளனர். மேலும், இதே அடிப்படையில்தான் அரையாண்டுத் தேர்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. மார்ச் மாதம் நடைபெற உள்ள பொதுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் வழக்கமாக செப்டம்பர் மாதத்திலேயே தயாரிக்கப்பட்டிருக்கும்.இந்த நிலையில், 20 ஒரு மதிப்பெண் வினாக்கள் பகுதியில் கொள்குறி வகை வினாக்களுக்கு பதிலாக ஐ.ஐ.டி., ஜே.இ.இ. கணிதத் தேர்வுகளில் கேட்கப்படுவதைப் போன்ற வடிவமைப்பில்தான் வினாக்கள் இருக்கும் என்று தேர்வுத் துறை கூறியிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இது தொடர்பாக கணித ஆசிரியர்களுக்கே வெள்ளிக்கிழமைதான் (ஜனவரி 11) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து மாதிரி செய்முறைத் தேர்வுகளும் மூன்றாவது வாரத்தில் இருந்து செய்முறைத் தேர்வுகளும் நடைபெற உள்ளன. பொங்கல் விடுமுறைக்கு பிறகு வெறும் 10 நாள்களே உள்ள நிலையில், வினாத்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டதை கணித ஆசிரியர்கள் தங்களது மாணவர்களுக்கு எப்படி விளக்கி, அதற்குப் பயிற்சிஅளிக்க முடியும் என்று தெரியவில்லை.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் ஏற்கெனவே பயிற்றுவித்த வினாத்தாள் வடிவமைப்பு முறையிலேயே பொதுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்றார்.இது தொடர்பாக மாநிலக் கல்வியியல், ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, பொதுத்தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பு கல்வியாண்டின் தொடக்கத்திலேயே திட்டமிடப்பட்டதுதான். ஆனால் தேர்வுத் துறையின் புதிய உத்தரவில் வினாத்தாள் வடிவமைப்பில் மாறுதல் ஏற்பட்டிருப்பதாகக் கூறுவது தொடர்பாக ஆராய்ச்சி நிறுவனத்தின் சம்பந்தப்பட்ட நிபுணர்களிடமும், தேர்வுத் துறையிடமும் விசாரித்து பதிலளிப்பதாகத் தெரிவித்தனர்

9 comments:

 1. Is this applicable for +1 only or both +1 &+2 .as +2 is going for public exam with old syllabus.

  ReplyDelete
 2. பாடங்களை தெளிவாக நடத்தி இருந்தால் கேள்வித்தாள் எப்படி வந்தா என்ன?

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் பற்றி அறியாது போல......

   Delete
  2. thaniyar palli manavanum apdi than irukkan,
   nama adikka koodathu thitta koodathunu rules vecha evanum padikka matan, engala avlo adi adichu padikka vecha teachers kooda ippo onnume panna mudiyama irukkanga, nanga padicha school la, record note eluthama lab exam ku varran oruthan, exam hall la bit adikkiravana pudicha avan eppadi ulla konduvara allow panninganu vathiyara kelvi kekuranunga, apparam epdi nadu uruppudum,

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. Will all these 1 marks be asked in choose or separately?

  ReplyDelete
 5. 11, 12 மாணவர்கள் மற்றும் சென்ற ஆண்டு 12 முடித்து வெளியில் சென்ற மாணவர்கள் என லட்சக்கணக்கான மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்க உள்ளார்கள். கடும் நிதி நெருக்கடியிலும் மாணவர்கள் நலன் கருதி கொடுக்க உள்ளார்கள். 9, 10 மாணவர்களுக்கும் கொடுக்க உள்ளார்கள் என்கிறார்கள். பள்ளியில் அணைத்து வேலைகளும் கணிப்பொறி மூலமாக குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டும். இதையெல்லாம் செய்ய பகுதி நேர ஆசிரியர்கள் வேண்டும். மாணவர்கள் நலன் கருதி 11, 12 வகுப்பிற்கு பாடம் நடத்த பகுதி நேர ஆசிரியர்கள் வேண்டும். ஸ்ட்ரைக் நடந்தால் பகுதி நேர ஆசிரியர்கள் கண்ணுக்கு தெரிவார்கள். இப்படி எல்லாமே செய்து வரும் இவர்களுக்கு சம்பளம் கொடுக்க எவருக்கும் தெரியாது. கேட்டால் நிதி நெருக்கடி. குடும்பத்தையும் பட்டினி பல வருசமா போட்டு இவர்களுடைய வயிற்றில் அடித்து நன்கு வாழ்கிறார்கள். கணிப்பொறி பாடம் நடத்த ஆசிரியர்கள் நியமனம் செய்யாமலேயே கணிப்பொறி மாணவர்கள் கல்வியும் கற்றுக் கொடுக்க படுகிறது. வேலைகளும் நடக்கிறது. நிதி நெருக்கடி.... புதிய படங்கள்..... அணைத்து தொகுப்பு வூதியம் பகுதி நேரம் இவர்களுக்கு போனஸ் உண்டு. இந்த அரசால் நியமிக்க பட்ட இவர்களுக்கு இல்லை.

  ReplyDelete
  Replies
  1. ethuku part time teachers, exam vechu full time ah recruit pannalame trb pgt ku,
   illana bt teachers recruit pannalam, evlo peru tet pass pannirukanga..

   Delete
 6. இந்த நடை முறை மாணவர்களுக்கு பயனுள்ளதா இருக்கும் ..

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி