மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள், இன்று வெளியீடு - kalviseithi

Jan 31, 2019

மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள், இன்று வெளியீடு


மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்பட உள்ளன.நாடு முழுவதும், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்புக்கு, 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.

தமிழகத்தில் மட்டும், 2,500 இடங்கள் உள்ளன.இந்த இடங்களில், தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தும், நீட் தேர்வில் தகுதி பெற்ற, எம்.பி.பி.எஸ்., டாக்டர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

2019 - 20 கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும், சென்னை, கோவை உள்ளிட்ட, 148 நகரங்களில், ஜன., 6ல் நடந்தது.இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் எழுதினர். தமிழகத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகள், www.natboard.edu.in என்ற, தேசிய தேர்வுகள் வாரிய இணையதளத்தில், இன்று வெளியிடப்பட உள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி