அரசு பள்ளிகளில் படிக்கும், 10 ஆயிரம் மாணவர்களுக்கு, உணவு, தங்குமிடத்துடன், முழு நேர, 'நீட்' பயிற்சி வழங்க, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2019

அரசு பள்ளிகளில் படிக்கும், 10 ஆயிரம் மாணவர்களுக்கு, உணவு, தங்குமிடத்துடன், முழு நேர, 'நீட்' பயிற்சி வழங்க, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு


அரசு பள்ளிகளில் படிக்கும், 10 ஆயிரம் மாணவர்களுக்கு, உணவு, தங்குமிடத்துடன், 13 கல்லுாரிகளில், இலவசமாக, முழு நேர, 'நீட்' பயிற்சி வழங்க, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவப் படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில்,தேர்ச்சி பெறுவது கட்டாயம். இரண்டு ஆண்டுகளாக, கட்டாயமாக தேர்வு நடத்தப்படும் நிலையில், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவது, மிகவும் குறைவாக உள்ளது. அரசு பள்ளி மாணவர்களும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்பில் சேர, தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், பல்வேறு வகை சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டில்,1,000க்கும் மேற்பட்ட பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வாயிலாக, மாநிலம் முழுவதும், 20 ஆயிரம் மாணவர்களுக்கு, நீட் பயிற்சி வழங்கப்படுகிறது. பள்ளி வேலை நாட்களில், மாலை நேரத்திலும், விடுமுறையில், சிறப்பு வகுப்பாகவும், இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், மார்ச், 19ல், அனைத்து பொது தேர்வுகளும் முடியவுள்ள நிலையில், மார்ச், 23 முதல், முழு நேர நீட் பயிற்சி வகுப்பை நடத்த, பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள, 13 தனியார் கல்லுாரிகளின் வளாகத்தில், உணவு, தங்குமிடம் வசதியுடன், இந்த பயிற்சி அளிக்கப்படும். இதற்கு, ஏற்கனவே பயிற்சி பெறும், 20 ஆயிரம் பேரில், அதிக மதிப்பெண் பெறும் நம்பிக்கையுள்ள, 10 ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.அவர்களுக்கு, நீட் பயிற்சியில் அனுபவம் பெற்ற, பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தனியார் பயிற்சி மையத்தினர் வழியாக, காலை முதல் மாலை வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியை, மே, 3ம் தேதி வரை நடத்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி