2 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு - kalviseithi

Feb 22, 2019

2 மாவட்டங்களுக்கு மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு



தூத்துக்குடி மாவட்டம்:

அய்யா வைகுண்டசாமி பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் மார்ச் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தேர்வுகள் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு விடுப்பு பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 9-ம் தேதி பணி நாளாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.


திருநெல்வேலி மாவட்டம்:

“அய்யா வைகுண்டர்” அவதார தினத்தை முன்னிட்டு, அடுத்த மாதம் (மார்ச் மாதம்) 4-ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு, உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது என, திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் ஷில்பா பிரபாகர் சதீஷ், வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்றில், தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக மார்ச் 9- ஆம் தேதி, இரண்டாம் சனிக்கிழமை, வேலை நாளாக இருக்கும் என்றும், மாவட்ட ஆட்சித்தலைவர், அந்த அறிக்கையில், குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி