விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனையருக்கு, வேலைவாய்ப்பில், 3 சதவீதம் இடம் ஒதுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
'அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு, வேலைவாய்ப்பில், 2 சதவீதம் இட ஒதுக்கப்படும்' என, 2018 சுதந்திர தின உரையின்போது, தமிழக முதல்வர்,இ.பி.எஸ்., அறிவித்தார்.'ஒதுக்கீட்டை, 3 சதவீதமாக உயர்த்த வேண்டும்' என, விளையாட்டு வீரர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதை, தமிழக அரசு ஏற்றது.இதையடுத்து, விளையாட்டு வீரர்கள் மற்றும்வீராங்கனையருக்கு, அரசுத்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், வேலைவாய்ப்பில், 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு, அரசாணை பிறப்பித்துள்ளது.
இந்த கோட்டா வில் அரசியல் வாதிகள்....நிச்சயம் புகுவார்கள்...
ReplyDeleteஅடுத்து ஹெல்மெட் போட்டா 10 % கள்ள காதல் கொலையில் உயிரிழந்த வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் 20 % டாஸ்மாக்கால் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு 20 % ஓதுக்கீடு MLA,MP வாரிசுகளுக்கு 20 % மரக்கன்று வருபவர்களுக்கு 20% கள்ளச்சாராயம் காய்ச்சிபவர்களின் வாரிசுகளுக்கு 9 % இடஒதுக்கீடு மற்றும் மனநலம் குன்றியவர்களுகு** 1 % இடஒதுக்கீடு. NOTE:** இந்த பிரிவில் அனைத்து தகுதிகளும் திறமைகளையும் பெற்றவர்கள் 99% மேற்பட்டோர் படித்துவிட்டு வேலை கிடைக்காததால் தவறான இடஒதுக்கீடு கொள்கையால் பாதிக்கப்பட்டு சட்டையை கிழித்துக் கொண்டு பைத்தியமானவர்கள் மருத்துவரிடம் மனநலம் குன்றியவர் என்று சான்றிதழ் கொடுத்தால் அவர்களுக்கு இந்த 1 % பயணியிடம் மட்டும்தான் வழங்கப்படும்.
ReplyDeleteSuper
ReplyDeletevilayatu veerarkaluku 3% nu soli avangata irunthu vote vaanga intha naadagam..
ReplyDelete