ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதால், அவர்களுக்கு பதிலாக, இதர துறை ஊழியர்களை, தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை ( முழு விவரம்) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2019

ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதால், அவர்களுக்கு பதிலாக, இதர துறை ஊழியர்களை, தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை ( முழு விவரம்)


'லோக்சபா தேர்தல் அட்டவணையின்படி, முதல் கட்டத்திலேயே, தமிழகத்தில் தேர்தல் நடத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதால், அவர்களுக்கு பதிலாக, இதர துறை ஊழியர்களை, தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும்' என, அ.தி.மு.க., சார்பில், தேர்தல் கமிஷனில் வலியுறுத்தப்பட்டுள்ளது.சென்னை, தலைமை செயலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டம், தேர்தல் கமிஷன் சார்பில், நேற்று நடந்தது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தலைமை வகித்தார்.

 கூட்டத்தில் பேசியது குறித்து, அரசியல் கட்சியினர் கூறியதாவது:அ.தி.மு.க., - ஜெயராமன்: லோக்சபா தேர்தல், பல கட்டமாக நடக்கும். அதில், முதல் கட்டத்திலேயே, ஒரே நேரத்தில், தமிழகத்தில் தேர்தலை நடத்த வேண்டும். குடிநீர் உட்பட அத்தியாவசிய பணிகளை, தேர்தலை காரணம் காட்டி தடை செய்யக் கூடாது. தேர்தல் பணியில், அனைத்து தரப்புஊழியர்களையும் பயன்படுத்த வேண்டும்.ஆசிரியர்களுக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதால், அவர்களுக்கு பதிலாக, கூட்டுறவுத் துறை ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் போன்றோரை, தேர்தல் பணியில் பயன்படுத்த வேண்டும் என, வலியுறுத்தினோம்.தி.மு.க., - கிரிராஜன்: வாக்காளர்சிறப்பு முகாம் குறித்து விவாதிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில், பல்வேறு குளறுபடிகள் உள்ளன. உதாரணமாக, சென்னை - ஆர்.கே.நகரில், 15 பாகங்களில், இரட்டை பதிவு, மூன்று முறை பதிவு உள்ளதை, தேர்தல் அதிகாரியிடம் வழங்கினோம். அவர், உடனடியாக நீக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.சென்னையில், 38 ஆயிரம் பேர், 'ஆன்லைன்' வழியே, வாக்காளர்களாக பதிவு செய்துள்ளனர். அதில், முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. ஆர்.கே.நகரில் நீக்கம் செய்யப்பட்ட பெயர்கள், மீண்டும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த தவறுகளை களைந்து, தேர்தல் நடத்தவேண்டும் என, வலியுறுத்தினோம்.

இந்திய கம்யூ., - பெரியசாமி: லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை, சேர்த்து நடத்த வேண்டும். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும்; பந்தல் அமைக்க வேண்டும் என கோரினோம்.தே.மு.தி.க., - இளங்கோவன்: வாக்காளர் பட்டியலில், இரட்டை பதிவு, மூன்று பதிவுகள் உள்ளன; அவற்றை நீக்க வேண்டும். வாக்காளர் சேர்ப்பு பணியில், ஆசிரியர்களை ஈடுபடுத்தாமல், தனியார் ஏஜன்சியை ஈடுபடுத்த வேண்டும் என, கூறி உள்ளோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்

19 comments:

  1. In all previous elections teacher were used for election duties,why this time ADMK avoid teachers because they know what they done for teachers.

    ReplyDelete
  2. yen teachers vitutu matha ooliyarkala vachu vote la yathathu corruption pana plan a..? epadium unga pamathu election la edupadathu..un aadchi kavila poguthu confirmed..

    ReplyDelete
  3. ஆசிரியர்கள் மேல அதிமுக அரசுக்கு ரொம்ப அக்கறை போல......

    ReplyDelete
  4. இது அக்கறை இல்லை,பயம்

    ReplyDelete
  5. அந்த பயம் இருக்கனும்........

    ReplyDelete
  6. No problem.. Nanga velila ninu vote podurom with our family and relations...:-)

    ReplyDelete
  7. மிக‌வும் ந‌ல்ல‌து...உள்ளே இருந்து ப‌ணி செய்வ‌தை விட‌ வெளியே இருந்து சுத‌ந்திர‌மாக‌ பொது ம‌க்க‌ள்,உற‌வுக‌ள் ம‌ற்றும் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் உங்க‌ளுக்கு எதிராக‌ உங்க‌ளின் ம‌க்க‌ள் விரோத‌ கூட்ட‌ணிக்கு எதிராக‌ வாக்குப் பிச்சை கேட்போம்.....எங்க‌ளின் காய‌ங்க‌ளுக்கு ம‌ருந்திடுவோம்...இது நிச்ச‌ய‌ம்..

    ReplyDelete
  8. 3 நாட்கள் தேர்தல் பயிற்சிகள் வேறு இடங்களில் கொடுக்கப்படுகிறது. 2 நாட்கள் தேர்தல் நடக்கிறது. மொத்தம் 5 நாட்களுக்கு ரூ1300 கொடுக்கப்படுகிறது.ஆனால் செலவு ரூ 2000 ஆகிறது.5 நாட்கள் படும் கஷ்டம் ஏராளம்.தயவுசெய்து ஆசிரியர்களை தேர்தல் பணிக்கு போடாதிர்கள்.

    ReplyDelete
  9. BLO Duty, election duty, free books received, trainigs அனைத்தையும் இரத்து செய்து மாணவர்களுக்கு பாடம் நடத்த வழி வகை செய்யுங்கள்.

    அதுவே அரசு பள்ளிகளை காப்பாற்ற ஒரு எளிய வழி.


    அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசுபணி என்று சட்டம் இயற்றலாம்

    ReplyDelete
  10. மிகவும் சரியாக கூறினிர்கள் PERUMAL SIR

    ReplyDelete
  11. இதனாலதான் தோற்றோம்னு பெருமையா சொல்லிக்கிற வாய்ப்பும் போச்சு......ஆசிரியர்கள் மேல் விழ இருந்த பழியும் போச்சு....ஆசிரியர்களென்ன அரசியல்வாதிகளா?????.அவர்கள் கடமையிலிருந்து தவறுவதில்லை!!!!அதனாலதான் மாணவர்களின் நலன் கருதி மனவலியோட strike ஐ முடிவுக்கு .....பயந்து இல்ல.....

    ReplyDelete
  12. ஆப்பு சொருகும் நேரம் இதுதான் !!!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி