வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு அரசு வட்டி தள்ளுபடி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு : தமிழக அரசு அறிக்கை வெளியீடு - அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி! - kalviseithi

Feb 23, 2019

வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு அரசு வட்டி தள்ளுபடி சலுகை மேலும் ஓராண்டு நீட்டிப்பு : தமிழக அரசு அறிக்கை வெளியீடு - அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!


தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு, அரசு அளித்த வட்டி  தள்ளுபடி சலுகை மேலும் ஒரு வருடம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

வட்டி சுமையின் காரணமாக, விற்பனை பத்திரம் பெறாமல் இருந்த, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு மாதாந்திர தவணை செலுத்த தவறியதற்கான அபராத வட்டி மற்றும் முதலாக்கத்தின் மீதான வட்டி முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியை வருடத்திற்கு ஐந்து மாதம் மட்டும் கணக்கிட்டு தள்ளுபடி செய்து, அரசு கடந்த 15.6.2017 அன்று ஆணையிட்டது. அரசின் இந்த சலுகையை ஒரு வருட காலத்திற்கு அதாவது 26.8.2018 வரை நடைமுறைப்படுத்த  நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த சலுகை மேலும் ஆறு மாதம் நீட்டிப்பு செய்யப்பட்டது. இதன்மூலம் பல்வேறு திட்டங்களில் ஒதுக்கீடுதாரர்கள் வட்டி தள்ளுபடி நீங்கலாக, முழு தொகையையும் செலுத்தி, விற்பனை பத்திரம் பெற்று பயனடைந்து வருகின்றனர்.

இச்சலுகை இந்த மாதம் 26ம் தேதியுடன் முடிய உள்ளதால், இந்த சலுகை 31.3.2020 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, வட்டிச்சுமையால் விற்பனை பத்திரம் பெறாத ஒதுக்கீடுதாரர்கள், உடனடியாக சம்பந்தப்பட்ட கோட்டம், பிரிவு அலுவலகங்களை அணுகி, வட்டி தள்ளுபடி நீங்கலாக, நிலுவை தொகையை உடன் செலுத்தி, விற்பனை பத்திரம் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி