கல்வித் தரம் மீது விளையாடினால் கடும் நடவடிக்கை - உச்ச நீதிமன்றம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 20, 2019

கல்வித் தரம் மீது விளையாடினால் கடும் நடவடிக்கை - உச்ச நீதிமன்றம்!


கல்வித் தரம் மீது விளையாடினால் கடும் நடவடிக்கை பாயும் என உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. மருத்துவம் மற்றும் சட்ட படிப்புகளை கேலிக்கூத்தாக்குவதை அனுமதிக்க முடியாது.

 உத்தர பிரதேசத்தில் இயங்கி வரும் தனியார் மருத்துவ கல்லுாரியில் இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்த சென்றனர். அப்போது கல்லுாரிக்குள் அவர்களை அனுமதிக்க நிர்வாகம் மறுத்துவிட்டது. இதையடுத்து அக்கல்லுாரி மீது இந்திய மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கல்வி என்பது சிலருக்கு பணம் சம்பாதிக்கும் தொழிலாக இருக்கலாம். ஆனால் அதன் தரத்தை மட்டுமே நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. மருத்துவம் மற்றும் சட்ட படிப்புகளை கேலிக்கூத்தாக்குவதை அனுமதிக்க முடியாது. கல்வித் தரம் மீது விளையாடினால் கடும் நடவடிக்கை பாயும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது

7 comments:

  1. உச்ச நீதிமன்றம் சொன்னால் மட்டும் கேட்டு விடுவாங்களா.

    ReplyDelete
  2. ஹா...ஹா...
    அருமை நண்பரே

    ReplyDelete
  3. Phd கூவி கூவி விற்கப்படுகின்றன.மூன்று லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டு கைடாக இருக்கும் பேராசிரியர்களே ஆராய்ச்சி மாணவர்களுச தீசிஸ் தயாரித்து கொடுத்து phd பெற வழி வகைகள் செய்து தருகிறார்கள்.ஆங்கிலம் நாலு வார்த்தை பேச எழுத தெரியாதவர்களுக்கு எப்படி phd வழங்கப்பட்டது.வெறும் பிரியாணியும் பணமும் தான் தற்போதைய phd க்கு வழிவகை செய்கிறது.

    ReplyDelete
    Replies
    1. Tnteu university வெளிப்படையாகவே நடக்கிறது

      Delete
    2. Tnteu university வெளிப்படையாகவே நடக்கிறது

      Delete
    3. phd easy ah vanguranunga, aana net/set pass panna vakku illa, kadaisila 2021ku apparam net/set ku value illanu sollitanunga, only phd

      Delete
  4. Ithuku mela play panna mudiyathu

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி