மார்ச் 12 ( செவ்வாய்க்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2019

மார்ச் 12 ( செவ்வாய்க்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


அருள்மிகு மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற மார்ச் 12ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே அமைந்துள்ள மிகவும் பிரசித்தப் பெற்றது மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில். இக்கோயில் குமரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தப்பெற்றது.

இக்கோயிலில் பத்து நாட்கள் நடைபெறும் மாசி கொடைவிழாவில் திருவிளக்கு பூஜைகள், அத்தாழ பூஜைகள், ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பூஜை, அம்மன் வெள்ளி பல்லாக்கில் பவனி வருதல், உச்சிகால பூஜை,வலியப்படுக்கை, பெரிய தீ வெட்டி அலங்கார பவனி உள்ளிட்ட பல்வேறு பூஜை நிகழ்ச்சிகள் ஒன்பது நாட்களும் நடைபெறும்.

10ஆம் நாளில் கொடை விழா நடைபெறுவது வழக்கம்.மேலும், இந்தக் கோயிலை பெண்களின் சபரிமலை எனவும் அழைப்பர். இந்தக் கோயிலின் இந்தாண்டு மாசிக் கொடை விழா மார்ச் 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் குமரி மட்டுமல்லாது கேரளாவிலிருந்தும் ஏராளமான பெண்கள் வந்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.இந்நிலையில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் 10ஆம் நாள் திருவிழா மார்ச் 12ஆம் தேதி நடைபெறுகிறது.

இதனையொட்டி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு .வடநேரே வெளியிட்ட செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழாவையொட்டி மார்ச் 12ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி