பிளஸ் 2 இயற்பியல் தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாள் எளிமையாக இருந்தாலும், ஒரு மதிப்பெண் கேள்விகளில் பெரும்பாலான கேள்விகள் பழைய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டதால்மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிளஸ்2 தேர்வு கடந்த 1ம் தேதி தொடங்கியது. மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள், கணக்கு, விலங்கியல், வணிகவியல் பாடங்களுக்கான தேர்வுகள் 7ம் தேதி வரை நடந்து முடிந்துள்ளன. 8,9ம் தேதிகள் சனி,ஞாயிறு விடுமுறை. நேற்று இயற்பியல், பொருளியல் மற்றும் 6 தொழில் கல்வி பாடங்களுக்கானதேர்வுகள் நடந்தன.
இயற்பியல் தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாள் மிகவும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். ஒரு மதிப்பெண் கேள்விகளில் 5 கேள்விகள் கருத்தியலாகவும், 10 கேள்விகள் கணகீடுகளாகவும் கேட்கப்பட்டுள்ளன.இவை அனைத்தும் பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்டுள்ளன. அதனால் நன்றாக படிக்கின்ற மாணவர்கள்கூட, கணக்கீடுகள் அடிப்படையில் சூத்திரங்களை பயன்படுத்தி கணக்கு போட்டுத்தான், விடையை கண்டுபிடிக்க வேண்டிய நிலைஏற்பட்டது.மேலும், நன்றாக யோசித்து மாணவர்களே கண்டுபிடித்து எழுத வேண்டிய நிலைஏற்பட்டது.
பாட ஆசிரியர்கள் கூட இந்த வகை கேள்விகளுக்கான விடைகளை உடனடியாக எழுதிவிட முடியாது.மற்றொரு பாடத்தில் இருந்து கருப்பொருளை எடுத்து, அதில் சூத்திரத்தை பயன்படுத்தி கேள்விக்கு பதில் தயார் செய்யும்வகையில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.அதனால் ஒரு மதிப்பெண் கேள்விகளில் முழு மதிப்பெண்கள் எடுப்பது கடினம். அடுத்து 2,3,5 மதிப்பெண்களுக்கான கேள்விகள் எளிதாகவே கேட்கப்பட்டுள்ளன.அதில் முழு மதிப்பெண் எடுக்க வாய்ப்புள்ளது.
இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் எல்லா பாடங்களுக்குமான தேர்வில் மொத்த மதிப்பெண் நூறாக குறைக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வு எளிதாக இருக்கும் என்று மாணவர்கள் எதிர்பார்த்துள்ளனர்.ஆனால் நேற்றைய இயற்பியல் தேர்வில் அதிக மதிப்பெண் எடு்க்க முடியும் என்று எதிர்பார்த்து சென்ற மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண் கேள்விகள் மாணவர்களை சோதித்துவிட்டது.
Teachers previous set question eduthuttanga. Somberi physics teacher. Ithala porattam vera.
ReplyDeleteHa ha ha
DeleteAdei loosungala innum book marave illa
ReplyDeleteIn 11th english question paper, 12th grammar questions asked.....
ReplyDelete