தேர்வு பணியில் தில்லுமுல்லு கூடாது: மாவட்ட அதிகாரிகளுக்கு தேர்வு துறை எச்சரிக்கை - kalviseithi

Mar 4, 2019

தேர்வு பணியில் தில்லுமுல்லு கூடாது: மாவட்ட அதிகாரிகளுக்கு தேர்வு துறை எச்சரிக்கை


தில்லுமுல்லுக்கு இடம் தராமல், பொதுத்தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி மற்றும் தேர்வுத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், மார்ச், 1ல் பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது. முதல் நாளில், தமிழ் உட்பட, மொழி பாடங்களுக்கான தேர்வு நடந்தது.நாளை, ஆங்கில மொழி பாடத்துக்கான தேர்வு நடக்கிறது. தேர்வில், 8.88 லட்சம் பேர் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் நாள் தேர்வில், பறக்கும் படை சோதனையில், சென்னையில் மட்டும், ஒரு,தனி தேர்வர் பிடிபட்டார்.

தேர்வுகளை நடத்தும் கண்காணிப்பாளர்கள், தலைமை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் போன்ற பதவிகளில், தேர்வுத்துறை வழியாக, ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.முதல் நாள் தேர்வன்று பல இடங்களில், தங்கள் வீட்டுக்கும், தேர்வு பணி ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிக்கும் இடையே அதிக துாரம் உள்ளதாக கூறி, ஆசிரியர்கள், பணியிடங்களை மாற்றி தரும்படி கேட்டுள்ளனர்.

சில இடங்களில், பிப்., 28ம் தேதி இரவில், மாவட்ட கல்வி அதிகாரிகளும், முதன்மை கல்வி அதிகாரிகளும், ஆசிரியர்களின் தேர்வு பணி இடங்களை மாற்றி வழங்கினர். இதுவரை, பிளஸ் 2 தேர்வு பணி வழங்கப்படாத, தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கும், தேர்வு துறை அனுமதியின்றி பணி ஒதுக்கப்பட்டது.

இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி கல்வி மற்றும் தேர்வு துறை அதிகாரிகள், பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி