இரண்டு பெண் குழந்தைகளையும் அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்த பிரபல குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்! குவியும் பாராட்டு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2019

இரண்டு பெண் குழந்தைகளையும் அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்த பிரபல குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்! குவியும் பாராட்டு!



பிரபல மருத்துவர் ஒருவர் தனது இரண்டு பெண் குழந்தைகளையும் அரசு தொடக்கப் பள்ளியில் சேர்த்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார்.

வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் சேர்ந்தவர் ராவணன். அரக்கோணம் நகரின் மிக முக்கியமான குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் ராவணன். அந்த வகையில் அரக்கோணத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் ராவணனுக்கு பரிச்சயமானவர்கள்.

சிறப்பான சிகிச்சை மற்றும் கரிசனமான கவனிப்பு போன்றவற்றால் ராவணனை தேடி ஏராளமானோர் தங்கள் குழந்தைகளுடன் வருவது வழக்கம். இப்படி தனது மருத்துவ துறையில் சாதனை படைத்து வந்த ராவணன் தற்போது மேலும் ஒரு செயலால் அனைவரது கவனத்தையும்ஈர்த்துள்ளார்.மருத்துவர் ராவணனுக்கு இரண்டு பெண் குழந்தைகள். ஒருவர் பெயர் பூந்தளிர். மற்றொருவர் பெயர் பூந்துளிர். இந்த இரண்டு பெண் குழந்தைகளையும் தான் அவர் அரக்கோணத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சேர்த்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

சாதாரண கூலித் தொழிலாளி தனது குழந்தைகள் ஆங்கில வழி கல்வியைப் பெறவேண்டும் என்று தனியார் பள்ளிகளை நாடிச் செல்லும் இந்த காலத்தில் பிரபலமான மருத்துவர் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் அரசு தொடக்கப் பள்ளிகள் சேர்த்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த விஷயம் என்னவென்றால் ராவணனின் மனைவியும் கூட தனது குழந்தைகள் அரசுப் பள்ளியிலேயே படிக்கலாம் என்று ஒப்புக் கொண்டது தான்.

தான் அரசுப் பள்ளியில் பயின்ற மருத்துவர் ஆனதாகவும் அந்த வகையில் தனது குழந்தைகளும் அரசு பள்ளியில் படித்து வாழ்வில் தங்கள் லட்சியங்களை அடைவார்கள் என்கிற நம்பிக்கையில் சேர்த்துள்ளதாக இராவணன் நிகழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி