RTE - கட்டாயக்கல்வி திட்டத்தில் இன்று முதல் பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 22, 2019

RTE - கட்டாயக்கல்வி திட்டத்தில் இன்று முதல் பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம்


குழந்தைகளுக்கான இலவச மற்றும்கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில், சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி.,யில், 25 சதவீத ஒதுக்கீட்டில் சேர்க்கை நடைபெறுகிறது.

அதன்படி, 2019-20ம் கல்வி ஆண்டில் ஆன்லைன் விண்ணப்ப பதிவுஇன்று 22ம் தேதி முதல் வரும் மே., 18ம் தேதி வரை நடைபெறுகிறது.பள்ளிக்கல்வி துறையின் http://rte.tnschools.gov.in/tamilnadu என்ற இணையதளத்தில் மாணவர்களின் போட்டோ, பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் முகவரி சான்று, ஆண்டு வருமான சான்று ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். பெற்றோரின் தொழில், ஆதார் எண், மொபைல் எண் விபரம் இடம்பெற வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி