1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு ஜுன் மாதம் புதிய பாடத்திட்டத்தில் பயிற்சி - தமிழக கல்வித்துறை - kalviseithi

May 20, 2019

1.30 லட்சம் ஆசிரியர்களுக்கு ஜுன் மாதம் புதிய பாடத்திட்டத்தில் பயிற்சி - தமிழக கல்வித்துறை


பள்ளிக் கல்வியில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 1 லட்சத்து 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க எஸ்இஆர்டி முடிவு செய்துள்ளது.

 பள்ளிக் கல்வியில் இதுவரை நடைமுறையில் இருந்த பாடத்திட்டத்தை, மாற்றி தற்கால வளர்ச்சியை அடிப்படையாக கொண்ட புதிய பாடத்திட்டத்தை உருவாக்க முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் தலைமையில் கல்விக் குழு அமைக்கப்பட்டது.

அந்த குழு கடந்த ஆண்டு 1,6,9,பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியது. அதன்பேரில் புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. மீதம் உள்ள 2,3,4,5,7,8,10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அந்த பணிகள் முடிக்கப்பட்டு, புதிய பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டன. தற்போது அந்தபுத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர தனியார் சில்லறை விற்பனை கடைகளுக்கும் வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கும் போது அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 10, பிளஸ் 2 வகுப்–்புகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் புதிய பாடத்திட்டத்தை புரிந்து கொண்டால் தான், மாணவர்களுக்கு பாடம் நடத்த  முடியும். அதனால் 1 லட்சத்து 30 ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டத்தின் தயாரிக்கப்பட்ட பாடப்புத்தகங்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த  பயிற்சி வரும் ஜூன் மாதம், மாநில கல்வி  ஆராய்ச்சி மற்றும் பயிற்சித்துறையின் மூலம் நடத்தப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி