கலை, அறிவியல் பட்டதாரிகளுக்கு ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்பு அறிமுகம்: அரசிதழில் வெளியீடு - kalviseithi

May 20, 2019

கலை, அறிவியல் பட்டதாரிகளுக்கு ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்பு அறிமுகம்: அரசிதழில் வெளியீடு


பிளஸ்2 முடித்த மாணவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்லும் வகையில் ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் கல்வியியல் படிப்பு(பி.எட்) அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசிதழில் வெளியாகியுள்ள அறிவிப்பு: பிளஸ்2 தேர்வுக்கு பின், இளநிலை பட்டம் பெற்ற பிறகு பி.எட் படிக்க வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ள நிலையில், தற்போது ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் படிப்புக்கான விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பிற நாட்டு ஆசிரியர் கல்வி நடைமுறைகளோடு ஒப்பிடப்பட்டு இந்த 4 ஆண்டு படிப்பு அறிமுகப்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 4 ஆண்டு ஆசிரியர் படிப்பில் கணிதம், அறிவியல், சமூகஅறிவியல், மானுடவியல், ஆசிரியர் பணி சார்ந்த பிற படிப்புகளில் உள்ள பாடங்கள் இடம்பெறும்.எழுத்துத்தேர்வு, செய்முறை தேர்வுக்கு இடையேயான இடைவெளியை குறைக்கும் வகையில் பாடப்பிரிவுகள் அதில் இடம்பெற்றிருக்கும்.

இதன்மூலம் ஆசிரியர் பணிக்கு தகுதிவாய்ந்த நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வி நிறுவனங்கள் இந்தஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி படிப்பை நடத்தலாம். இந்த படிப்புக்கான வழிமுறைகளை பின்பற்றி, கட்டமைப்புகளை உருவாக்கி விண்ணப்பிக்கும் நிறுவனங்களுக்கு இந்த படிப்பைநடத்துவதற்கான அனுமதி வழங்கப்படும். இவ்வாறு மத்திய அரசின் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. SRIRAM COACHING CENTRE 
    PULIANGUDI- TIRUNELVELI 
    BEST TNTET GUIDE 
    OLD AND NEW SYLLABUS(2019)
    TAMIL - 2
    ENGLISH - 1
    PSYCHOLOGY - 1 
    MAJOR - 2,
    PGTRB - TAMIL,ENGLISH,HISTORY, ECONOMICS..
    FIRST 100 PERSON ONLY 
    CELL: 86789 13626

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி