விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்ட 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் - தேர்வுத்துறை அதிரடி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2019

விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்ட 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் - தேர்வுத்துறை அதிரடி!


தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்ட 500 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் சுமார் 60 லட்சம் விடைத்தாள்களை திருத்தும் பணியில் சுமார் 25 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இதில், விடைக்கான மதிப்பெண்களை கூட்டும் போது பல விடைத்தாள்களில் பிழை இருப்பதை தேர்வுகள் இயக்குநரகம் கண்டுபிடித்தது.

இந்த நிலையில், விடைத்தாள் நகல் கேட்டு 50 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் மறுகூட்டலுக்கு 4,500  மாணவர்கள் விண்ணப்பித்தனர். அதில் 30% விடைத்தாள்களில் மதிப்பெண்கள் கூட்டுவதில் தவறு இருந்ததும், குறைந்தபட்சம் 10 மதிப்பெண்கள் அளவுக்கு பிழை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக 72 மதிப்பெண்ணுக்கு பதிலாக 27 என்று மதிப்பெண் பெற்றதாக போடப்பட்டது போன்ற தவறுகள் நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு, கூட்டத் தெரியாத 500 ஆசிரியர்களுக்கு தேர்வுகள் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

14 comments:

  1. They are correctky totalling their pay, D.A.and arrear pays .
    But It is difficult to them.

    ReplyDelete
    Replies
    1. Sivalingam sir nega soilradhu yelam sari thappu panirukaga illa nu soilala panavaroda age idhala theriyama pesadhiga andha time la exam duty election work 3 public exam paper valuation nu yela workayum adhigama kudutha ipadidha agum even machine kuda neraya work ah kuduka kuduka repair agum avagalam machine illa humans therijikoga.

      Delete
    2. Super.some prepare govt salary bills @ home.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  2. They are correctly totalling their pay, D.A.and arrear pays .
    But It is difficult to them.

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர்கள் செய்யும் தவறுகளுக்கு மாணவர்கள் 1,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.��

      Delete
  3. Yena yena technology la kandu pidikaraiga ye idhuku oru machine ready pana kudadhu use ful ah irukumey

    ReplyDelete
  4. இனி ஆசிரியர்கள் திருத்துவதை விட....மாணவனே தான் எழுதிய தேர்வு தாளை திருத்தி மதிப்பெண்ணை போட்டுக்கொள்ளும் வசதியை மாண்பு மிகு அம்மாவின் அரசு செய்யலாம்......
    கூட சேர்ந்து திண்டுக்கல் ஸ்ரீநிவாசன் வழி நடத்தலாம்.....

    ReplyDelete
  5. See everyone is human being.. Mistakes are common. U just have to know out of nearly 5 lakh papers they committed mistake of around 500. This is common to everyone.. Sivalingam if u realize this thing u didn't post this cheap comment. Just try to understand mistakes are common to every one. Even at u.

    ReplyDelete
    Replies
    1. இதே தவறை நீங்கள் செய்தாலும் இப்படித்தான் பேசுவீங்கபோல...

      Delete
  6. Ithu studentoda life, ithula thappu panna kodathu... Seekaram thiruthi mudikirenu niraiya per thappu panranga...

    ReplyDelete
  7. ஒருத்தன் திருத்துறான், ஒருத்தன் சரியா இருக்காணு பாக்குறான்,
    இன்னொருத்தன் எல்லாமே சரின்னு சொல்லுறான்,
    என்ன வேலைடா பாக்குறிங்க, யாருமே மெஷின் இல்ல தான், ஆனா வாங்கற காசுக்கு வேலை பாக்க கூட வக்கு இல்லன என்ன dashக்கு வேலை பாக்கணும், உங்களுக்கு ஏதோ இது சின்ன தவறு, revaluation கூட போட முடியாம கஷ்ட பட்டு படிக்கிற பசங்களுக்கு இதுல எவ்வளவு பாதிப்பு இருக்கு, காசு இருக்கவன் மறு கூட்டல் மறு திருத்தம் பண்ணுறான், இல்லாதவன் எங்க போவான்...
    அஞ்சு லட்சம் பேப்பர் ஒரே ஆளா திருத்துறான், இல்லையே, ஒரு நாளைக்கு இவ்வளவு தாள் தான் திருத்தனுனு சொல்லி தான குடுக்குறாங்க, அது எங்க போச்சு. சும்மா சப்ப கட்டு கட்டாம உருப்புடியா வேலை பாருங்க, அரசு ஆசிரியர்கள் எப்படி விடைத்தாள் திருத்துற எடத்துல வேலை பக்குராங்கனு உள்ள போற ஆளுக்கு தான் தெரியும்,
    இதுல ஒருத்தன் தேர்தல் டூட்டி போனேன், அங்க போனேன் இங்க போனேன்னு சொல்லுறான், அப்பறம் வேற எதுக்கு தான் உனக்கு சம்பளம், இலவசமா வேலை பாத்தா இப்படி கேள்வி கேக்கலாம், காசு வாங்குரில,
    தேர்தல் வேலை நாங்க செய்ய முடியாதுன்னு கேஸ் போட வக்கு இல்ல, பேச வந்துட்டான்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி