54 பட்டங்கள் அரசு வேலைக்கு தகுதியானது அல்ல: தமிழக அரசு அரசாணை வெளியீடு! - kalviseithi

May 15, 2019

54 பட்டங்கள் அரசு வேலைக்கு தகுதியானது அல்ல: தமிழக அரசு அரசாணை வெளியீடு!


தமிழகத்தில் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் 50-க்கும் மேற்பட்ட பட்ட படிப்புகள் அரசு வேலை பெற தகுதியானது அல்ல என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும் பிசிஏ பட்டம், பிஎஸ்சி கணிதத்திற்கு சமமல்ல என்று கூறியுள்ளது. பாரதிய பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவை வழங்கும் எம்எஸ்சி நுண்ணுயிரியல் பட்டம் பணிக்கு ஏற்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் எம்எஸ்சி, நுண்ணுயிரியல் முதுகலைப்படிப்புகள், எம்எஸ்சி விலங்கியல் முதுகலைப்படிப்புக்கு நிகரானவை அல்ல என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது,  அரசு வேலை வாய்ப்புக்கு தகுதியாக கருதப்படும் பட்டபடிப்புகள் நிகராக 50 க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை கருத முடியாது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு 33 பட்ட மேற்படிப்புகள் அரசு  வேலைவாய்ப்பிற்கு தகுதியற்றவை என அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Click here - Equivalence of Degrees And Non - Equivalence of Degrees - Equivalence Committee Orders...


3 comments:

 1. https://timesofindia.indiatimes.com/city/madurai/HC-full-bench-to-decide-on-validity-of-equivalence-certificates/articleshow/26435134.cms

  ReplyDelete
 2. This comment has been removed by the author.

  ReplyDelete
 3. Then what basis they allow engineering graduates to pursue b.ed course.?
  Will they be eligible for tgt or pgt post?

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி