அங்கன்வாடியில் எல்.கே.ஜி., ஆசிரியர்கள் இடமாற்றம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2019

அங்கன்வாடியில் எல்.கே.ஜி., ஆசிரியர்கள் இடமாற்றம்!


அங்கன்வாடிகளில் புதிதாக துவக்கப்படும், எல்.கே.ஜி., வகுப்பில் பாடம் எடுக்க, 2,400 அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர்.

'தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், ஆங்கில வகுப்புகள் துவங்க வேண்டும்' என, பல்வேறு மாவட்டங்களின் பெற்றோர், கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன்படி, அரசு தொடக்கப் பள்ளிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளை ஆங்கில வழியில் நடத்த, தமிழக பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக, மாநிலம் முழுவதும், தொடக்கப் பள்ளிகள் அருகேயுள்ள, 2,381 அங்கன்வாடி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.அவற்றில், எல்.கே.ஜி., வகுப்புகளை துவக்க, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகளை, தொடக்க கல்வி இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது. இந்தஅங்கன் வாடிகளில் வரும், 3ம் தேதி முதல், மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்த, உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில், 2,381 அங்கன்வாடிகளிலும், எல்.கே.ஜி., பாடம் நடத்த, அரசு பள்ளி ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். மாவட்ட வாரியாக பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை விகிதத்தை விட அதிகமாக உள்ள ஆசிரியர்கள், அருகில் உள்ள அங்கன்வாடிகளுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி