பள்ளி மாணவர்களுக்கான பாடநூல் விற்பனை தொடக்கம்: இணையதளம் மூலமாகவும் பெறலாம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 14, 2019

பள்ளி மாணவர்களுக்கான பாடநூல் விற்பனை தொடக்கம்: இணையதளம் மூலமாகவும் பெறலாம்!


பள்ளிக் கல்வியில் 3, 4, 5 வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கான புதிய பாடநூல்கள் விற்பனை தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பள்ளி கல்வித்துறை சார்பில் 2019-20- ஆம் கல்விஆண்டில் பயிலும் மாணவர்களுக்கான 1-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளது. பாடநூல்களுக்கு அவற்றின் பக்கங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனம் விலை நிர்ணயம் செய்துள்ளது.

அதன் விவரம்:  40-52 பக்கங்கள் - ரூ.30,  56-72 பக்கங்கள் - ரூ. 40, 76-92 பக்கங்கள் - ரூ.50, 96-116 பக்கங்கள் - ரூ.60, 120-136 பக்கங்கள் -ரூ.70, 352-368 பக்கங்கள் - ரூ.180.

பத்தாம் வகுப்பு பாட நூல்களின் விலை:

தமிழ் - ரூ.130,
ஆங்கிலம் - ரூ.120,
கணக்கு - ரூ.180,
அறிவியல் - ரூ.180

பிளஸ் 2 வகுப்பு பாட நூல்களின் விலை:

தமிழ் - ரூ.120,
சிறப்புத் தமிழ் - ரூ.150,
ஆங்கிலம் - ரூ.130,
கணக்கு பகுதி-1 - ரூ.170,
இயற்பியல் பகுதி-1 - ரூ.180,
வேதியியல் பகுதி-1- ரூ.160,
தாவரவியல் - ரூ.170,
விலங்கியல் - ரூ.170,
பொருளியல்- ரூ.170,
வணிகவியல் - ரூ.160, கணக்குப்பதிவியல் - ரூ.180 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2  வகுப்பில் தாவரவியல், விலங்கியலுக்கு ஒரே புத்தகம் தான் எனவும் பாடநூல் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியது:

தமிழகத்தில் வரும் கல்வியாண்டுக்கான பாடநூல்களை பள்ளிகள் மொத்தமாக, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து விநியோகிக்கின்றன.  நிகழாண்டில்,  3, 4, 5 வகுப்புகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்குமான புதிய பாட நூல்கள் விற்பனை, சென்னை, நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் திங்கள்கிழமை  தொடங்கியது.  இதேபோல,சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ளமையத்திலும் பாடநூல்கள் கிடைக்கும்.  விடுபட்ட வகுப்புகளுக்கான விற்பனை விரைவில் தொடங்கும்.

வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும்:

வெளி மாவட்டங்களில் உள்ள மாணவர்கள், பெற்றோர் வசதிக்காக www.textbookcorpin  என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து பணம் செலுத்தி பாட புத்தகங்களை பெற்றுக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.  இணையதளத்தில் பதிவு செய்த அடுத்த மூன்று நாள்களுக்குள் பாடநூல்கள் நேரடியாக வீடுகளுக்கே கூரியர் சேவை மூலம் அனுப்பி வைக்கப்படும்.பாடநூல்கள் விலை விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இதுதவிர தமிழ்நாடு பாடநூல்கல்வியியல் பணிகள் நிறுவனத்தில் ஏற்கெனவே பதிவு செய்த பள்ளிகள், பாடநூல்களை மொத்தமாகப் பெறுவதற்கு இணையதளத்தைத் தொடர்பு கொள்ளலாம். வழக்கம்போல் 60 சதவீத பாடநூல்கள் இலவச விநியோகத்துக்கும்,  40 சதவீத பாடநூல்கள் விற்பனைக்காகவும்  அச்சிடப்பட்டுள்ளதாக  தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி