'டிப்ளமா' முடித்தவர்கள், பகுதிநேர இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கான அறிவிப்பு! - kalviseithi

May 6, 2019

'டிப்ளமா' முடித்தவர்கள், பகுதிநேர இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கான அறிவிப்பு!


பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2வுக்கு பின், பாலிடெக்னிக் படித்தவர்கள், இன்ஜினியரிங் படிப்புகளில் சேரலாம். இதில், நேரடி இரண்டாம் ஆண்டு, தினசரி வகுப்பு மற்றும் பகுதி நேர படிப்பு என, இரண்டு வகைகளில் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில், பகுதி நேர படிப்புக்கான மாணவர் சேர்க்யை, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதற்கான, கவுன்சிலிங்கை, தமிழக அரசு சார்பில், கோவை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி நடத்துகிறது.டிப்ளமா இன்ஜினியரிங் முடித்து, நிறுவனங்களில் பணியாற்றுவோர், பகுதி நேரமாக, பி.இ., மற்றும் பி.டெக்., படிப்புகளில் சேர, இன்று முதல், ஜூன், 4ம் தேதி வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் பதிவு செய்த பின், அதன் பிரதியை அச்செடுத்து,ஜூன், 7க்குள், கோவை இன்ஸ்டிடியூட் ஆப்டெக்னாலஜி நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டும். ஜூன், 27ல், தரவரிசை வெளியிடப்படும்ஜூன், 30ல், கவுன்சிலிங் துவங்கி, அன்றே முடிக்கப்படும். இதன் விபரங்களை, www.ptbe-tnea.com என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி