டான்செட் விணணப்பிக்க இன்று கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2019

டான்செட் விணணப்பிக்க இன்று கடைசி நாள்


முதுநிலை இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை, எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான டான்செட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். டான்செட் நுழைவுத்தேர்வுக்கு அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் விண்ணப்பித்தல் மே 8ம் தேதி தொடங்கியது.

நேற்று மாலை 6 மணி வரை எம்பிஏ படிக்க 16,427 பேரும், எம்சிஏ படிக்க 4,672 ேபரும், எம்.இ, எம்.டெக், எம்.பிளான், எம்.ஆர்க் படிக்க 10,288 பேர்  என மொத்தம் 31,387 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இணையதளத்தில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும்.எம்சிஏவுக்கு ஜூன் 22ம் தேதி  காலை 10 மணி முதல் 12 மணி வரையும், எம்பிஏ படிப்புக்கு ஜூன் 22ம் தேதி பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையும், முதுநிலை இன்ஜினியரிங் படிப்புகளுக்கு ஜூன் 23ம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரையும் டான்செட் நுழைவுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி