TNTET 2019 - டெட் தேர்வு நுழைவுச்சீட்டு: தரவிறக்கம் செய்ய வழிமுறைகள் வெளியீடு! - kalviseithi

May 31, 2019

TNTET 2019 - டெட் தேர்வு நுழைவுச்சீட்டு: தரவிறக்கம் செய்ய வழிமுறைகள் வெளியீடு!


ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச் சீட்டைதரவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதை தரவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம்தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்- 1 மற்றும் தாள்- 2 ஆகியவற்றுக்கான தேர்வுகள் வரும் ஜூன் 8, 9 ஆகிய இரு தினங்கள் நடைபெற உள்ளன.

இந்தத் தகுதித்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்யும் வகையில் கடந்த மே 26-ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.சில தேர்வர்கள் பயனியர் குறியீடு, கடவுச்சொல் ஆகியவற்றை மறந்துவிட்டதால் நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்ய இயலாத நிலை உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இவர்கள் நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்ய உரிய வழிமுறைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (http://www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளன.

இந்த முறையினை பயன்படுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி