அரசு ஊழியர்கள் சம்பளம் இனி புதிய சாப்ட்வேர் மூலம் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 20, 2019

அரசு ஊழியர்கள் சம்பளம் இனி புதிய சாப்ட்வேர் மூலம் ஆகஸ்ட் 1 முதல் நடைமுறை


அரசு ஊழியர்களுக்கான சம்பளப்பட்டியலுக்கான பில்களை இனி ஐஎப்எச்ஆர்எம்எஸ் சாப்ட்வேர் மூலம் தயாரித்து கருவூலங்களுக்கு அனுப்ப வேண்டும் என்று அரசின் முதன்மை செயலர் மற்றும் ஆணையர் தென்காசி ஜவகர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 30 லட்சம் பேருக்குமான சம்பள பட்டியல், டிஏ பில், தொகுப்பூதியம், ஒப்பந்த பணியாளர்கள் ஆகியோருக்கான ஊதிய பட்டியல், துறைசார்ந்த செலவினங்களுக்கான பில்கள் ஆகியவை ஏடிபிபிஎஸ், வெப் பே ரோல் ஆகிய ெமன்பொருள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வழங்கப்பட்டன. இந்த நடைமுறை வரும் 31.07.2019 தேதியுடன் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது.

அதற்கு பதில் கருவூலகத்துக்கான ஐஎப்எச்ஆர்எம்எஸ் என்ற புதிய சாப்ட்வேர் மூலமே சம்பளப்பட்டியல் உட்பட அனைத்து பில்களையும் அனுப்ப வேண்டும். பழைய சாப்ட்வேர் மூலம் பில்களை அனுப்பினால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று கருவூலகம் மற்றும் கணக்குத்துறை முதன்மை செயலர் மற்றும் ஆணையர் தென்காசி ஜவகர் உத்தரவிட்டுள்ளார்.இந்த புதிய சாப்ட்வேர் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் காலதாமதமின்றி விரைவாக கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

1 comment:

  1. அமுதசுரபி பயிற்சி மையம்
    PG TRB தமிழ்
    கிருஷ்ணகிரி
    CONTACT :9842138560, 9344035171

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி